செவ்வாய், 29 ஏப்ரல், 2014


மகிந்தவை பொதுநலவாய தலைவர் பதவியில் இருந்து நீக்குக!– ஐ.தே.கட்சி கமலேஸ் சர்மாவுக்கு கடிதம்
பொதுநலவாய நாடுகளின் தலைவர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சவை நீக்குமாறு வலியுறுத்தி, ஐக்கிய தேசிய கட்சி, பொதுநலவாய நாடுகள் அமைப்பின்  செயலாளர் கமலேஷ் சர்மாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
ஐக்கிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.
இலங்கையில் ஜனநாயகம் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அந்தரத்தில் ஊசல் ஆடிக் கொண்டிருக்கிறது.
பொதுநலவாய பெறுமதிகள் இலங்கையில் பாதுகாக்கப்படுவதில்லை.
பொதுநலவாய நாடுகளின் அமைப்பு தலைவர் மகிந்த ராஜபக்சவின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் வைத்து அண்மையில் ஐந்து ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இது தொடர்பில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில் பொதுநலவாய பெறுமதிகளை பாதுகாக்க தவறும் இலங்கை ஜனாதிபதியை,  அந்த அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக