புதன், 30 ஏப்ரல், 2014

வவுனியா கொழும்பு ரயில்கள் நேருக்கு நேர் மோதல் – 70 பேர் காயம் – 5 பேர் கவலைக்கிடம்
Rain-Vauneja-06ஒரே தண்டவாளத்தில் பயணித்த இரண்டு ரயில்கள் ஒன்றுக்கு ஒன்று மோதியதில் இன்று பாரிய விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து வவுனியா
நோக்கி சென்ற நகரங்களுக்கு இடையிலான சொகுசு ரயிலும், வவுனியாவில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரஜரட்ட என்ற புகையிரதமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதன்போது ரயில் பெட்டிகள் 20 அடிவரையில் வீசப்பட்டுள்ளன. ரயில் பெட்டிகள் இரண்டிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இரு எஞ்ஜின்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குருநாகல் – பொத்துஹெர பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 70 பேர் காயமடைந்திருப்பதாகவும், அவர்களில் 5 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், குருநாகல் மற்றும் பொல்காவல வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பொல்காவல – குருநாகல் ரயில் சேவையும் பாதிப்படைந்துள்ளது.
வடபகுதி ரயில் வண்டியுடன் மற்றொரு ரயில் மோதி விபத்து! 70 பேர் காயம் – 5 பேர் கவலைக்கிடம்
குருநாகல் பொத்துஹெர ரயில் நிலையத்தில் வடபகுதிக்கான அதிசொகுசு ரயில் வண்டியுடன் மற்றொரு ரயில் வண்டி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 70 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று புதன்கிழமை காலை 8.45 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. சமிக்ஞை கோளாறு காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியாவில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பளை நோக்கி பயணித்த கடுகதி சொகுசு ரயிலுடன் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது
காயமடைந்தவர்கள் அனைவரும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் காயமடைந்தவர்கள் எப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இதன்காரணமாக வடபகுதிக்கான ரயில் சேவைகள் முற்றாக சீர்குலைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.Rain-VaunejaRain-Vauneja-01Rain-Vauneja-03Rain-Vauneja-05

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக