திங்கள், 28 ஏப்ரல், 2014


ரூபினி வரதலிங்கம் வடமாகாணசபைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்
யாழ்.மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் மற்றும் வவுனியா மேலதிக அரச அதிபராக கடமையாற்றி வரும் சரஸ்வதி ஆகியோர் வடமாகாணசபைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக யாழ். மேலதிக அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில்,
வட மாகாண சபைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கடிதம் தனக்கு கிடைத்துள்ளது. எனினும் தனது கல்வித் தகுதிக்கேற்ற பதவிகளுக்கு அங்கே வெற்றிடம் இல்லை என தெரிவித்தார்.
எனினும், தற்போதைய அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் அவரோடிணைந்த குழுவினருடன் நீண்ட நாட்களாக போராடி வந்திருந்த ரூபினி வரதலிங்கத்தின் மீது பழிவாங்கும் படலமே இந்த இடமாற்ற உத்தரவு என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி  மற்றும் அமைச்சு செயலாளர்களினை இடமாற்றம் செய்ய வடமாகாணசபையின் முதலமைச்சர் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், யாழில் அரச உயரதிகாரிகள் திடீர் இடமாற்றம் செய்யப்பட உள்ளமை சுட்டிக்காட்டப்படத் தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக