சனி, 19 ஏப்ரல், 2014

புங்குடுதீவு மடத்துவெளி மண்ணில் 23 வருடங்களின் பின் சித்திரத் தேரேறி அருள் பாலித்த சிங்கரவேலன் 
புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்ப்பிரமணிய  சுவாமி கோவில் தேர்த்திருவிழா  இன்றைய தினம் வெகு சிறப்பாக  நடந்தது.1991 இடம்பெயர்வின் பின்னர்

மீண்டும் 23  வருடங்களின் பின் இன்றைய ரதோற்சவம் இடம்பெற்றது .அப்பகுதி வாழ் புலம்பெயர் மக்களினால் பெரும் போருட்செலவில்கடந்த வருடம்  ஆலயம்  முற்றிலுமாக புனருத்தாரணம் செய்யபட்டு ராஜகோபுரமும் கட்டபட்டு கடந்த வருடம் குடமுழுக்கு நிகழ்வுற்றது.இப்போது 23 வருடங்களின் பின்னர் இன்று சித்திரதேறேரி அருள்மிகு பாலசுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சமேதராக  தேரில் ஆரோகணித்து  மக்களின் குறை தீர்த்த அற்புத காட்சி தனை புலம்பெயர் மக்களும் பார்க்கும் வகையில் சிவன் டி வி நேரடி ஒளிரப்பு செய்தது .
கடந்த வருடம் நிகழ்ந்த கும்பாபிசேகம்  இறுவட்டு  வெளியீடும் நடைபெற்றது புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் யுத்தகால இடம்பெயர்வினால் சுமார் 22 வருடங்களின் பின்னர் இந்த வருடம் மீண்டும் வருடாந்த திருவிழா நடைபெறயுள்ள செய்தி கேட்டு புலம்பெயர் புங்குடுதீவு மக்கள் நாங்கள் புளகாங்கிதம் அடைந்துள்ளோம். புலம்பெயர் மக்களின் ஆதரவின் நிமித்தம் முற்றிலுமான மீள் புனருதாரண த்தின் பின்னர் கடந்த வருடம்  நிகழ்ந்த குடமுழுக்கை அடுத்தே இந்த மகோற்சவவிழா நிகழ இளமுருகன் அருள் கூடியுள்ளது .
                                   
                                                         புங்குடுதீவு மண்ணில் புகுந்தவிடத் து பிரதான வீதியின் மேற்கே கிழக்கு நோக்கி எழுந்தருளிக் கோலோச்சி ஆட்சி செய்யும் எங்கள் சிங்காரவேலனவன் சன்னிதியே மண்ணின் மகிமையை தூக்கி நிறுத்தும் , பசைப்பசெலேன்ற நெல்வயல்களின் பரப்பிடையே பனந்தோப்பின் பின்னணி திகழ பாலசுப்பிரமணியன் படையாட்சி . என் இளமைபருவகாலம் வரை   நாச்சிமார் கோவில் என அழைக்கப்பட்ட இந்த 400 வருடகால பழமை வாய்ந்த ஆலயம் தீவுப்பகுதியில்  மற்ற ஆலயங்களை விட மாறுபட்ட சிறப்பம்சங் களை கொண்ட பெருமை பெற்ற ஆலயமாகும் . சின்னநல்லூர் என்றும் செல்லப்பெயரால் வழங்கப்பட்ட இந்த முருகன் ஆலயம் முற்றிலும் சைவ சமய விதிகளை கடைப்பிடித்து நித்திய  திருவிழா கால கிரியைகள் நடைபெறுவது இயல்பு.வருடாந்த பகல், இரவு திருவிழாக்கள் 12 மணிக்கு நிறைவுறுவதும் எந்தவொரு கேளிக்கை,சினிமா,மற்றும் சமயத்துக்கு ஒவ்வாத நிகழ்ச் சிகளும் இல்லாத இறுக்கமான கட்டுப்பாடுகளை பேணி வருவதும் குறிப்பிடத்தக்கது .ஆலயம் என்றதும்  ஆன்மாக்கள் லயிக்கின்ற இடம் என்ற பொருளுணர்த்தும் சீரான அமைப்பு ஒழுங்கு விதிகளை  கொண்டு அதன்படியே ஒழுகி மக்களை ஒருவழி நிலைப்படுத்த உதவுகிற கோவிலாக விளங்கிய பெருமை மிக்கது . 70 களில் எம்மண்ணிலே முதன்முதலில் முழு சிற்பத் தேர் கண்ட வரலாற்றுப் பதிவு கொண்ட ஆலயம் இது. எம்மண்ணில் வாழ்ந்த சைவப்பெரியர்களான வே.சபாபதிபிள்ளை ,வே.அருணாசலம்,வி.இராமனாதன் போன்றோரின் அர்ப்பணிப்பில் வளர்ச்சியுற்ற வேலனவன் வழிபாட்டிடம் 90 களின் ஆரம்பத்தில் நடந்த பாரிய இடம்பெயர்வின் நிமித்தம்  சீர்கெட்டு போயிருந்த நிலையை மாற்ற விளைந்த வி.இராமநாதன் துரதிர்ஷ்ட வசமாக முருகன் தாழ் சேர  புனருத்தாரண வேலைகள் தொங்கிப் போயின .இந்த இக்கட்டான நிலையில் முருகன் அருளால் கனடாவில் வாழ்ந்து வந்த  சமூக வழிகாட்டியான  அ .சண்முகநாதன் எம்மண்ணுக்கு திரும்ப வந்து ஆலய நிர்வாகத்தை பொறுப்பேற்று புலம்பெயர் மக்களின் பேராதரவுடன் சிறப்பான முறையில் சீரமைத்து 2013 இல் குடமுழுக்கையும் நடத்தி வெற்றி கண்டார் . தொடரும் அவரின் சமயபணி களினால் ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா இந்த வருடம் சிறப்பாக நடைபெறவுள்ளது கண்டு உள்ளம் பூரிக்கிறோம்  அவன் அருள் சேர்க்கிறோம் .இன்னமும் புலம்பெயர் மக்கள்  தேவையான  திருப்பணிகளுக்காக உதவி செய்து எம்பெருமான் பாலசுப்பிரமணியன் எழுகுன்றை ஏத்திடுவோம் வாரீர் . ஏற்றம் செய்தே  இளமுருகனவன் அருளாலே அவன் தாழ் வணங்கி இன்புற்றிருப்போமாக .
                          ``குடத்து முழுக்கு கண்டு கோலோச்சும் எங்கள்
                      மடத்துவெளி முருகனவன் மகோற்சவம் காண
                      இடத்தைப்  பெயர்ந்து இங்குற்ற போதும் நாம்
                  திடத்தோடு தினமுமுன் திருவடி  வணங்குகிறோம் ``.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக