இந்தியாவோட எதிர்காலம் வாக்குப்பதிவு இயந்திரத்துக்குள்ளே இருக்குது. மிச்ச சொச்ச எதிர்காலம் பற்றிய பதிவுகளும் முடிஞ்ச பிறகுதான் மொத்தமா எண்ணுவாங்க.''
""ஆமாப்பா…தமிழ்நாட்டோட 39 தொகுதிகளின் தலையெழுத்தும் இயந்திரத்துக்குள்ளே தான் இருக்குது. மே 16வரை சஸ்பென்ஸ்தான்ங்கிறதால அரசியல் தலைவர்கள், பேச்சாளர்களெல்லாம் வெகேஷன் டைம் போல வெளியில கிளம்பிட்டாங்க. கொடநாட்டுக்குப் போயிட்டாரு
ஜெ., பேரக்குழந்தைகளோடும் குடும்பத்தினரோடும் ஹாங்காங் போய்விட்டார் மு.க.ஸ்டாலின். வாலிபால் விளையாடி உடலைப் பேணி பொழுதைப் போக்குகிறார் வைகோ. பா.ஜ.க ஹெச்.ராஜா வாரணாசிக்குப்போய் மோடிக்கு ஆதரவா பிரச்சாரம் செய்கிறார். கவிஞர் மனுஷ்யபுத்திரனோ அதே வாரணாசியில் மோடிக்கு எதிரா பிரச்சாரம் பண்ணி பட்டயக் கௌப்புறாராம்.''
""என்னதான் வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி னாலும் தமிழ்நாட்டு ரிசல்ட் எப்படி இருக்கும்ங்கிற நினைப்பு அவங்களுக்கு இருக்கத்தானே செய்யும்?''
""அது இல்லாமலா? ஆளுங்கட்சியில் தொகுதி பொறுப்பாளர்களாக வேலை பார்த்த மந்திரி களெல்லாம், எங்க தொகுதியில் நமக்குத்தான் வெற்றின்னு ஜெ.விடம் உறுதியா சொல்லியிருக்காங்க. ஜெ.விடம் அவங்க அதிகமா பேச முடியாதுங்கிறதால, ஜெ. கொடநாடு போனதும், சீனியர் மந்திரியான ஓ.பி.எஸ்ஸை சந்திச்ச சில மந்திரி கள், அண்ணே.. எங்க கையில இருக்கிறது ரொம்ப சின்ன இலாகா. அதை வச்சித் தான் எலெக்சன் செலவை சமாளிச் சிருக்கோம். அம்மா திரும்பி வந்ததும், பெரிய இலாகாவை ரெகமண்ட் பண்ணி வாங்கிக்கொடுங்கன்னு சொல்லிட்டு, கோயில் கோயிலா சுத்த ஆரம்பிச்சிட்டாங்க.''
""ரிசல்ட் நல்லபடியா இருக்கணும்னா?''
""ஆமாம்.. இல்லன்னா அவங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்காதே.. மந்திரிகள் தங்களுக்குள்ளே பேசிக்கிறப்ப, 1 லட்சம் ஓட்டுக்கு மேலே லீடிங் வரும்னு சொல்ற தொகுதிகள் 10தான். 7 தொகுதிகளில் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் லீடிங்கில் வர லாம்னு சொல்றாங்களாம். மற்ற தொகுதி களோட பொறுப்பாளர்களா இருந்த மந்திரிகளெல்லாம் மிரட்சியிலதான் இருக் காங்களாம். நாற்பதுக்கு நாற்பதுன்னு ஆரம்பிச்சி, ஜெ.தான் பிரதமர்னு சொல்லி ஓட்டுக் கேட்கப் போனோம். ஆனா மக்கள் கிட்டே சரியா மாட்டிக்கிட்டோம். பிய்ச்சி எடுத்துட்டாங்கன்னு மந்திரிகளுக்குள்ளே பேசிக்கிறாங்க. கொடநாட்டுக்கு ஜெ. புறப் படும்போது அவரோட மனதிலும் முகத்திலும் பெரிய உற் சாகமில்லைன்னு கோட்டை யில் உள்ள அதிகாரிகள் சொல்றாங்க. சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்ட நெருக்கடிகள் ஒரு பக்கம்னா, தேர்தலில் கடைசி நேர பணப்பட்டுவாடாவை எதிர் பார்த்த அளவுக்கு செய்யாமல் நிர்வாகிகள் பலரும் சுருட் டிட்டாங்கன்னு தொடர்ந்து புகார் ஃபேக்ஸ் கள் வந்தபடியே இருந்ததுதான் இன்னொரு பக்க கவலை. சென்னை யில் உள்ள 3 தொகுதி களிலிருந்தும் அ.தி.மு.க தொண்டர்கள் நிறைய புகார்களை அனுப்பியிருக்காங்க.''
""வீடு தேடி வந்து கவர் கொடுத்த ஏரியாக்களெல்லாம் உண்டே.. அப்படியிருந்துமா புகார்கள்?''
""பல தொகுதிகளில் பட்டுவாடா பலமாத்தான் நடந்திருக்குது. ஆனா, சில தொகுதிகளைப் பொறுத்தவரை, வெளி யில் வந்தது பாதிகூட இல்லைன்னும், மீதியெல்லாம் மந்திரிகள், மா.செக்கள், பகுதிச் செயலாளர், வட்டச் செயலாளர், கவுன்சிலர் போன்ற அடுத்தடுத்த நிலையில் உள்ளவங்களால் சுருட்டப்பட்டுடிச்சின்னும் புகார்கள் குவிஞ்சிருக்குது. சென்னையைப் பொறுத்தவரை தொகுதிக்கு கட்சி சார்பில் 20சி, அமைச்சர் சார்பில் 5 சி, வேட்பாளர் 2சி, கடைசி நேர செலவாக 3சின்னு 30 சி பட்ஜெட், வடசென்னைக்கு அமைச்சர் மாதவரம் மூர்த்தி, தென்சென்னைக்கு அமைச்சர் வளர்மதின்னு பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இரண்டு இடத்திலிருந்தும் நிறைய புகார்கள். வளர்மதியை போனில் கூப்பிட்டு டோஸ் விட்ட ஜெ., உன்னை நம்பினேன். நீயுமான்னு கேட்டிருக்கிறார்.''
""வளர்மதி என்ன பதில் சொன்னாராம்?''
""எம்.எல்.ஏக்கள் கலைராஜன், அசோக், கந்தன், ராஜலட்சுமி ஆகியோரையும் பகுதி-வட்ட நிர்வாகிகளையும் குற்றஞ்சாட்டி, கடைசி நேரத்தில் இவங்க யாரும் ஒத்துழைக்கலைன்னு பம்மி பம்மி சொல்லியிருக்காரு. ஜெ.வோ தேர்தல் ரிசல்ட் வரட்டும்னு சொல்லி போனை கட் பண்ணிட்டா ராம். மிரண்டு போயிருக்கும் வளர்மதி, யார்யார்கிட்ட பட்டுவாடா பொறுப்பைக் கொடுத்தாரோ அவங்களையெல் லாம் கூப்பிட்டு, உங்களால என் பதவிக்கே ஆபத்து வந்திடும் போலிருக்கு. எவ்வளவு தந்தீங்க, எவ்வளவு சுருட்டுனீங்கன்னு லிஸ்ட் வேணும்னு கேட்டிருக்காரு. இதன் மூலமா கணக்கு வழக் கைப் பார்த்து, நிர்வாகிகள்கிட்டேயிருந்து 2 சியும், தன் கையி லிருந்து 2சியும் போட்டு கொடநாட்டிலிருந்து ஜெ. ரிட்டன் ஆனதும், பட்டுவாடா பண்ணாமல் போன பணம் இதுதான்னு திருப்பிக்கொடுத்து பதவியைக் காப்பாத்திக்கலாமான்னு யோசிக்கிறாராம்.''
""ஜெ. இதையெல்லாம் ஏத்துக்குவாரா?''
""மந்திரிகள் ஒவ்வொருவரும் தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்கான காரணங்களைச் சொன்னாலும் ஜெ. இதையெல்லாம் கேட்கும் மனநிலையில் இல்லையாம். சில வியூகங்களையும் வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுத்தும் இவங்க அதை சரியா செய்யாம கெடுத்துட்டாங்கன்னு ஜெ. சொல்லியிருக்கிறார். 25 தொகுதிகளில் இலை ஜெயிக்கணும். ஒண்ணு குறைஞ்சாலும் மந்திரிகளுக்கு ரிவிட்டுதான்னு சொல்லப்பட்டிருக்குதாம்.
""மே 16ல் மத்திய மந்திரிசபையை யார் அமைக்கப் போறாங்கன்னு நாடு முழுக்க எதிர்பார்க்குதுன்னா, மாநில மந்திரி சபையிலும் அதிரடி மாற்றம் இருக்குமாங்கிற எதிர்பார்ப்பு தமிழ்நாட்டில் இருக்குதுப்பா...''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக