புதன், 30 ஏப்ரல், 2014

திருக்கோவிலில் 11 வயது மாணவிகள் 5 பேர் ஆசிரியரினால்  துஸ்பிரயோகம் 
பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி கற்றுவரும் 11 வயதுடைய ஐந்து மாணவிகளே மேற்படி ஆசிரியரினால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய
ஆசிரியர் கடந்த செவ்வாய்க்கிழமை (22) கைது செய்யப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்துக்குட்பட்ட பிரபல  தமிழ் பாடசாலையொன்றைச் சேர்ந்த ஐந்து மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அப்பாடசாலையின் ஆசிரியர் ஒருவர், பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அதேவேளை, அப்பாடசாலையின் அதிபரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தெரிவத்தார்.
இச்சம்பவத்தையடுத்து குறித்த ஆசிரியரை 22ஆம் திகதியில் இருந்து பணித்தடை செய்துள்ளதாகவும் அப்பாடசாலை அதிபரை அக்கரைப்பற்றிலுள்ள பாடசாலையொன்றுக்கு இடமாற்றம் செய்யததாகவும் வலயக்கல்வி பணிப்பாளர் கூறினார். இதேவேளை, குறித்த சம்பவம் இடம்பெற்ற பாடசாலைக்கு தற்காலிக அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என அவர் மேலம் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக