சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், எதிரும் புதிருமாக வரிந்துகட்டும் சிறுத்தைகள் திருமாவும், பா.ம.க. காடுவெட்டி குருவும் தேர்தலில், தவறுதலாக சின்னத்தை மாற்றி ஓட்டு போட்டுவிட்டதாக ஒரு விறுவிறு தகவல், சிதம்பரம் தொகுதி முழுக்க பரபரவென பரவிக்கொண்டிருக்கிறது.
24-ந் தேதி வாக்குபதிவு முடிந்த நிலையில், அன்று இரவு 10 மணியளவில் பா.ம.க. வேட்பாளர் சுதாவும், அவரது கணவர் மணிரத்தினமும் தங்கள் ஆதரவாளர்கள் புடைசூழ காடுவெட்டி நோக்கிச் சென்றனர். தங்களை கட்சியில் இணைத்து சீட் வாங்கிக் கொடுத்த காடுவெட்டி குருவுக்கு நன்றி சொல்லவே இந்தப் பயணம். அவர்கள் போனபோது படுக்கைக்குச் சென்றிருந்த குரு, அரைமணி நேரத்துக்குப்பின் ஈரத் தலையைத் துவட்டியபடியே, தலையை நீட்டி, "கொஞ்சம் ஒக்காருங்க... வர்றேன்'’என்றபடி உள்ளே சென்றார்.
சில நிமிடங்களுக்குப் பின் சட்டை போட்டுக்கொண்டு வந்து... "நெலம எப்படி இருக்கு?' என்றபடியே அமர்ந்தார். மணி ரத்தினமோ, ""அண்ணே. நிலைமை ரொம்ப நல்லா இருக்குண்ணே. நன்றிண்ணே. எங்க வெற்றிக்காக கடுமையா உழைச்சிருக்கீங்க. உங்க உழைப்பே எங்களை ஜெயிக்கவைக்கப் போகுதுண்ணே''’என்றார் நெகிழ்ச்சியாக.
""இருக்கட்டும். இங்க அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஜெயங்கொண்டம், அரியலூர், குன்னமெல்லாம் நமக்கு நல்லாயிருக்கு. ஆனா கடலூர் மாவட்டத்தில் இருக்கும் மூணு சட்டமன்றத் தொகுதிகள்தான் சரியில்லன்னு கேள்விப்பட்டேன். சரி, தேர்தல் முடிஞ்சிடிச்சி; பாத்துக்கலாம்''’என்றார் நிதானமாக குரு. அப்போது மணிரத்தினத்துக்கு போன் வர, செல்போனை அவரது உதவியாளர் கொண்டுவந்து மணியிடம் கொடுத்தார்.
அதை கேஷுவலாக வாங்கிய மணியோ, ""அப்படியா. ஆமா... ஆமா... ஆமாண்ணே''’ என சத்தமாகப் பேச, குருவின் முகம் கொஞ்சம் இறுகியது. காரணம், யாரும் குருவிற்கு எதிரில் இப்படி சத்தம் போட்டுப் பேசமாட்டார்கள்.
போனை வைத்துவிட்டு ""இப்பவே நாம ஜெயிச்ச மாதிரிதான். கடலூர் மாவட்டமும் நமக்கு நல்லா இருந்துச்சி''’என்று ஓவர் கான்ஃபிடன்ஸோடு சொன்னார் மணி.
அப்போது பா.ம.க. பிரமுகர் ஒருவர் குருவிடம் "அண்ணே, சின்னம் பலரையும் குழப்பியெடுத்துடுச்சி. ஓட்டு மெஷின்ல நம்ம மாம்பழமும், திருமாவின் மோதிரமும் மேலும் கீழுமா இருக்கு. ரெண்டும் ஒரே மாதிரி கோல்ட் கலர்ல இருந்துச்சு'’ எனச் சொல்ல... குருவோ ‘""அந்தக் கதையை ஏன்ய்யா கேக்குறே. நானும் மோதிரத்தை மாம்பழம்னு நினைச்சி ஒரு நிமிடம் தடுமாறிட்டேன். அப்புறமா வெளில வந்து எல்லோருக்கும் போன் போட்டு "கவனமா போடுங்க. 5 ஆம் நம்பர்ல இருக்கிறதுதான் நம்ம சின்னம். பொறுமையாப் பாத்துப் போடுங்க. மாறி 6-க்குப் போட்றா தீங்க'ன்னு சொன்னேன்''’என்று ஜாலியாய்ச் சொல்ல, அங்கிருந்த பா.ம.க.வினர் சிலர், ""அண்ணனே மாத்திப் போட்டுட்டார்னு நினைக்கிறேன். அதைச் சொல்லும்போது ஒரு பதட்டத்தைப் பாத்தியா?''’என தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.
அப்போது மணிரத்தினம் ""அண்ணே, ஒண்ணு தெரியுமா? திருமாவளவனே தடுமாறிப்போய் நம்ம மாம்பழச் சின் னத்தில் ஓட்டைப் போட்டுட்டார்''’என்று சொல்ல, "அப்படியா?'’என நம்ப முடியாமல் திகைத்தார் குரு.
உடனே மணிரத்தினம், தன்னோடு வந்திருந்த ஒரு நிருபரிடம் கை காட்ட... அந்த நிருபர், தன் லேப்டாப்பை ஆன் செய்து வீடியோ கிளிப்பிங்ஸை ஓடவிட்டார். எல்லோரது விழிகளும் அந்தக் காட்சியிலேயே நின்று நிலைத்தது.
திருமா ஓட்டுப்போட வருகிறார். முதலில் அவரது அம்மா வாக்களிக்கிறார். அடுத்து திருமா வாக்கு எந்திரத்துக்கு முன்புறம் போய் நிற்கிறார். அப்போது நிருபர்கள், "சார்... சார்... ஓட்டுப் போடற மாதிரி போஸ் கொடுங்க சார்'’என்று சொல்ல... திருமாவும் ஓட்டு போடுவது போல சில நிமிடங்கள் போஸ் கொடுத்தார். அது முடிந்ததும், அவர் அங்கிருந்து நகர, தேர்தல் அதிகாரிகள், ""சார் உங்க ஓட்டு போலிங் ஆகலை. நீங்க போடுங்க''’என்று சொல்ல, பதட்டமாக திருமா மீண்டும் ஓட்டு போட வருகிறார். ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்து பொத்தானை அழுத்து கிறார். பிறகு ஏனோ திடீரென தன் நெஞ்சில் கை வைக்கிறார்.
நிருபரோ ""பாத்தீங்களா, திருமா குழம்பிப் போய் மாத்தி ஓட்டுப் போட் டுட்டார். பிறகு தன் தவறு அவருக்குப் புரிய, பகீராகி நெஞ்சில் கை வைக்கிறார்''’என விளக்கம் கொடுத்தார்.
இதைக்கேட்டு குபீரென சிரித்த குரு ""நம்ம ஆளுங்களும் இப்படிதான் மாத்தி ஓட்டுப் போட்ருப்பாங்களா?''’என்று கேட்க... மணியோ ""‘இல்லை, நம்ம மாம்பழம் மேலே இருக்கு. அதனால் அவங்க ஓட்டுதான் நமக்கு மாறி விழுந்திருக் கும்''’என்றார் உற்சாகமாக.
குருவிடம் விடைபெற்றுக் கிளம்பிய மணி ரத்தினம் தரப்பு, வழியிலும் திருமா மாற்றி ஓட்டுப் போட் டுட்டார் என்றே திரும்பத் திரும்ப சொல்லிச் சிரித்தது.
குரு, மாம்பழத்துக்குப் பதில் மோதிரத்துக்கு ஓட்டுப் போட்டாரா? என அவரைத் தொடர்புகொள்ள முயன் றோம்.
லைனில் வந்த பா.ம.க. மாநில துணைப்பொதுச் செயலாளர் திருஞானமோ ""திருமாவளவன் ஓட்டு போட மறந்துட்டு, பூத்தைவிட்டுப் போய்ட்டார். அப்புறமா அவருக்கு ஞாபகப்படுத்தி, ஓட்டு போடவச்சாங்க. இந்த சேதி உலகம் பூரா பரவிடிச்சி. அதனால் அதுக்கு ஈடுகட்ட, இப்படியொரு தகவலை அவங் கத் தரப்பு பரப்பிக் கிட்டிருக்கு. அதையெல்லாம் நம்பாதீங்க'' என்றார் பரபரப்பாய்.
திருமா மோதிரத்திற்கு பதில், மாம்பழத்தில் வாக்களித் தாரா என, அவரது கருத்தை அறிய முயன்றோம். சிறுத்தை கள் இயக்க செய்தித் தொடர்பாளர் வன்னியரசோ ""கிராமங்கள்ல ஒரு பழமொழி சொல்வாங்க. "தன் நெத்தியில மஞ்சப் பத்து போட்டுக்கிட்டு, அடுத்தவன் முதுகுல அழுக்கு இருக்குன்னு பேசுவாங்க'ன்னு இப்படிப்பட்டவங்களுடன் எங்களைப் பத்தி குறை சொல்றாங்க. எப்பவும், எங்கயும் நாங்க தெளிவாத் தான் இருப்போம். திருமா மோதிரத்துக்குதான் வாக்களித்தார்''‘என்றார் காட்டம் குறையாமல்.
எனினும் இந்த செய்திகள், தொகுதி கடந்தும் சிறகடிக்கத் தொடங்கியிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக