செவ்வாய், 29 ஜனவரி, 2013


சுவிட்சர்லாந்து வாழ் புங்குடுதீவு ஏழாம் ,எட்டாம் வட்டார மக்களின் 

                                         விருந்துபசார வைபவம்


காலம்;- 03.02.2013 ஞாயிறு மாலை 3 மணி
இடம்  :- .Mädergutstr, 3018 Bern .kleefeld Zentrum (நிமலன் வீட்டுக்கு அருகில்)


எமது மடத்துவெளி ஊரதீவு மக்களை ஒருங்கிணைத்து உறவாடி நட்பார்ந்த நல்வழியில் நமக்குள்ளே அன்பால் உறவால் ஊர்ப்பற்றால் கட்டுண்டு கிடக்க வழி சமைப்போம் . ஏழாம் , எட்டாம் வட்டார  மடத்துவெளி ஊரதீவு மக்கள் யாராகிலும் இந்த வைபவத்தில் குடும்பமாக கலந்து சிறப்பிக்கலாம் .  முடிந்தவரை நாம்  தொலைபேசி ஊடாகவும் அழைப்பை உண்டுபண்ணுவோம்,தொடர்பு கிடைக்காதவர்களும் ஊர் மீதான பற்றை மனதில்  எண்ணி நீங்களாகவே  இந்த அழைப்பை ஏற்று  கலந்து சிறப்பிக்குமாறு  கேட்டுக் கொள்கிறோம் . எமக்குள்ளே எமது கிராமங்களின் பண்பை உறவை பற்றை வளர்த்தெடுப்பதற்கான ஒரு பாரிய முயற்சியே இது.
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும்  பங்கு கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் . தேநீர் ,சிற்றுண்டிகள், மாலை உணவு, குளிர்பானங்கள் வழங்கப்படும்


முக்கிய குறிப்பு ;- இந்த வைபவத்தில் எவ்விதமான நிதி சேகரிப்போ அன்றி அன்பளிப்பு சம்பந்தமான அறிவிப்புக்களோ இருக்க மாட்டாது.

                                                                             தங்கள் வரவை நாடும் அமைப்பாளர்கள்

தொடர்புகள்

                           இ.ரவீந்திரன்                         079 218 70 75
                           சு.சண்முகநாதன்                044  451 80 22
                           நா.ஜெயக்குமார் (பாபு )     031 862 18 03 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக