ஞாயிறு, 31 அக்டோபர், 2010

எழுச்சி வேந்தன் எஸ்.கே.மகேந்திரன்
--------------------------------------------
இலங்கையின் எழுச்சிமிகு பேச்சாளர்களில் முன்னணி வகிக்கும் ஓரு இளம் அரசியல்வாதியும் சமூக சேவையாளருமான எஸ்.கே என்று செல்லமாக அழைக்கப்படும் எஸ்.கே .மகேந்திரன் புங்குடுதீவு மண்ணுக்கு பெருமை சேர்த்த ஓரு பெருந்தகை என்றால் மிகை ஆகாது.
இவர் 1951 ஆம் ஆண்டு மாசித் திங்கள் மகர லக்கினமும் சுவாதி நட்சத்திரமும் கூடிய நன்னாள் ஒன்பதாம் நாளிலே ௭ஆம் வட்டாரம் கந்தையா தங்கம்மா தம்பதிக்கு ஏக புத்திரனாக அவதரித்தார்.மழலைப் பருவத்திலேயே போசாக்கான அழகிய குழந்தை என்ற பட்டத்தினை திரு எ.எல்.தம்பி ஐயா இடம் பெற்ற பெருமை உடையவர்.இவர் தனது ஆரம்பக்கல்வியை திருநாவுக்கரசு வித்தியாசாலை,கமலாம்பிகை கனிஸ்ட மஹா வித்தியாலயம் என்பவற்றில் கற்று உயர் கல்வியை வேலணை மத்திய கல்லூரியில் மேற்ற்கொண்டார்.தொடர்ந்து இலங்கை சட்டக் கல்லூரியிலே சட்டத்தரணியாக வெளியேறினர் .பின்வந்த காலங்களில் இந்தியாவிலே தனது எம்.ஏ. பட்டத்தினை பெற்றுக் கொண்டார்..
சட்டக் கல்லூரியில் நடை பெற்ற எழுந்தமான பேச்சுப் போட்டியில் முதலாவது இடத்தை பிடித்து துரைசாமி நினைவு தங்கப் பதக்கத்தைப் பறித்து எமது மண்ணுக்கு பெருமை சேர்த்தார் .இவரது சமூக சேவை பாதையில் முதல் படியாக ௧௯௬௫ தனது பதினைந்தாவது வயதிலேயே ஊரதீவு இளம் தமிழர் மன்றத்தினை அமைத்து இளம் சந்ததியிடையே பெரும் அறிவுப் புரசியை ஏற்படுத்தினர்.ஆன்மிகப் பணியில் இவர் தனது மாமனாரின் (சபாரத்தினம்) வழியைபின்பற்றி பானாவிடைச் சிவன் கோவிலின் பாரிய வளர்ச்சிக்கு அடி கோலினார். இந்த ஆலயத்தின் தலைவர் பொறுப்பினை ஏற்று சிறப்பாக பணியாற்றினார். இந்த ஆலயத்தின் தொண்டுகளில் அன்னதானப் பணியில் புனரமைப்பு பணிகளில் எனா ஊரதீவு மடத்துவெளி சனசமூக நிலைய இளைஞர்களை ஈடுபடுத்தி வெற்றி கண்டவர்.
இவர் தனது அரசியல் பாதையில் அடைந்த உச்ச இலக்கு பராடத் தக்கது.ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியின் வழியில் அதன் மூளை என் வர்ணிக்கப்பட்ட வீ.நவரதினத்தை தனது குருவாக ஏற்று வளர்ச்சி அடைந்தார்.
அறுபது மூன்றாம் ஆண்டு மாசித் திங்களில் முற்றவெளி மைதான தமிழரசுக்
கட்சி மேடையில் இளம்பேச்சினை கர்ச்சித்து தலைவர்களின் பாராட்டைப் பெற்று ஆரம்பித்த இவரின் அரசியல் சொற்பொழிவு நெடுந்தீவு முதல் அம்பாறை வரை சுமார் இருபது வருடங்களாக ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது.தமிழ் இளைஞர் பேரவையின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராகிய எஸ்.கே. அரசியல் மேடைகளில் அமிர்தலிங்கம், இராசதுரை ,போன்ற சிறந்த பேச்சாளர்களில் பட்டியலில் இவரது பெயரும் இணைந்து அந்த கால மேடைகளை எழுச்சி காண வைத்தது. வீ.நவரத்தினம் அடையாள அட்டை மசோதா எதிர்ப்புக் கொள்கை காரணமாக கட்சியை விட்டு வெளியேறிய போது இவரோடு சென்சொற்று கடனாக பின்சென்ற்றர். காலக்கிரமத்தில் மீண்டும் தாய்க் கட்சியோடு இணைந்து மாவட்ட சபை தேர்தல் அறிமுக காலத்தில் தீவுப்பகுதிக்கான வேட்பாளராக நியமிக்க கூடிய தகுதியை அடைந்து இளைஞர் பேரவை சார்பில் அ.சண்முகனாதணல் பிரேரிக்கப்பட்ட போது புங்குடுதீவின் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப களம் முதல் பாடுபட்ட வே.க.சோமசுந்தரம் என்ற மூத்தவருக்கு விட்டுக் கொடுக்கும்படி அப்போதைய யாழ் முன்னால் மேயர் விஸ்வநாதன் கேட்டதற்ற்காக விட்டுகொடுத்து பிரச்சாரப் பணியில் தன்னை ஈடுபடுத்தினர். அடுத்த தீவுப்பகுதி பாராளுமன்ற பிரதிநிதியாக இவருக்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படும் என்ற உறுதிமொழி இந்த நேரத்தில் கொடுக்கபட்டுதும்
பின்வந்த காலங்களில் விடுதலைப் போராட்ட வேகத்தில் அததற்கான நேரம் கிடைக்காமலேயே போனது இவரது வாழ்வில் கிடைத்த துரதிஸ்டமான விதி என்றே கூறலாம்.
இளம்தமிழர் மன்றத்தினை திறந்து வைத்த அந்த விழாவில் தொழிலாளர் தோழன் என்ற நாடகத்தினை சிறப்பாக மேடையேற்றினர்.இவரது வழிகாட்டலில் அந்த கிராமத்து இளைஞர்களான அத்பர் நா.இராசதுரை .கு.யோகலிங்கம்,க,சிவானந்தன்,க.ஸ்ரீஸ்கந்தராசா,க.இராஜகுலசிங்கம்,சி.சசிகாந்தன்,த.தவக்குமார்.
ஐ.குலேந்திரன்,இரா.பிரபா,இரா.கந்தசாமி,காந்தி,ஆனந்தன்,நா.கருணாநிதி .சி.அரும்பொருள்,சி.நாகரத்தினம்,க,கந்தசாமி,க.ஜெயபாலன் ,ஆ.கைலைநாதன் ,போன்றோர் முக்கியமானவர்கள் ,இளம்தமிழர் மன்றத்தில் ஆரம்பித்த இவர் ஊரதீவு சனசமூகநினலியம் ,பானவிடை சிவன் கோவில்,ஊரதீவு கிராமமுன்னேற்ற சங்கம் புங்குடுதீவு மது ஒழிப்புக் கழகம் ,மாணவர் பேரவை,தமிழ் இளைஞர் பேரவை ,தமிழரசுக் கட்சி ,தமிழர் சுயாட்சி கழகம் ,தமிழர் விடுதலைக் கூட்டணி என சகல அமைப்புக்களிலும் ஈடுபாடு காட்டி வெற்றி கண்டார்,. தனது கிராமத்தோடு மட்டும் நின்று விடாது அயல் கிராமமான மடத்துவெளி சமூக சேவை இளைஞர்களோடும் எளிதில் பழகி அவர்களையும் தன்னோடுஈர்த்துக் கொண்டார்.
1978தை பத்தொன்பதில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் எடுத்து புங்குடுதீவுக்கு காலடி எடுத்து vஐப்பதை ஒட்டி எடுக்கப்பட்ட விழா ஊரதீவு ,மடத்துவெளி கிராமத்தை சேர்ந்த இளைஞர்களால் கமலாம்பிகை மஹா வித்தியாலய முன்றலில் சிறப்பாக நடாத்தப்பட்டது .இந்த விழாவினை அ.சண்முகநாதன் ,நா.தர்மபாலன் .சு.மா.தனபாலன்,சிவ.சந்திரபாலன் ,பொ.அமிர்தலிங்கம் pontறோர் முன்னின்று சிறப்பாகக நடத்தியதாக கனடா பூவரசம்பொழுது இதழ் எழுதி இருக்கிறது.இந்த விழாவில் அ.அமிர்தலிங்கம்,மன்கையற்ற்கரசி அமிர்தலிங்கம் ,வே.யோகேஸ்வரன்,உட்பட பெரிய தலைவர்கள் வந்திருந்து வாழ்த்தி பேசியிருந்தார்கள் .விழாவை சிறப்பிக்க
சு.மா.தனபாலனின் இயக்கத்தில் மெழுகுவர்த்தி அணைகின்றது ,என்ற நாடகமும் சிவ.சந்திரபாலனின் கிராமத்து அத்தியாயம் என்ற தாள லய நாடகமும் அரங்கேறியது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக