திங்கள், 24 மார்ச், 2014

பெரியவாணர்,சின்னவாணர்


கடல் கொண்ட குமரிக்கண்டத்தின்  எஞ்சி உள்ள பகுதிகளாக கூறப்படும் தீவுக் கூட்டங்களின் புங்குடுதீவில் மடத்துவெளி ஊரதீவு கிராமங்கள் சங்க கால நெய்தல் வாழ்க்கை முறையைக் கொண்டதாக வரலாறு கூறுகிறது.இந்த பெருமை பெற்ற மடத்துவெளி மண்ணிலே வந்துத்தித்த
பெருமனி தர்கள் தான் சின்ன வாணரும் பெரிய வாணருமாகும். சின்ன வாணர் என செல்லமாக அழைக்கப்படும் ச.அம்பலவாணர் மடத்துவெளி அமெரிக்கன் மிசன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை கற்று உயர்கல்வியை கோப்பாய் கல்லூரியிலும் யாழ்ப்பாணக் கல்லூரியிலும் தமிழ் ஆங்கில மொழி ஊடகத்தில் கற்று தேறினார். பெரிய வாணரும் இவருமாய் இணைந்து புங்குடுதீவின் துயர் போக்க எண்ணினார்.முதலில் அந்த கால வழமையான பாணியில்  பொருள்தேடும் பொருட்டு மலேசியாவுக்கு சென்று தம் பொருளாதரா அத்திவாரத்தை பலம் ஆக்கினர் .பொருள் தேட சென்ற இடது பொருளாதார வசதிகள் வாய்ப்புகளை கண்டு யோசித்தனர் .அங்கெ கண்ட வீதிகள் பாலங்கள் கட்டிடங்கள் கடல் தடுப்பு அணைகள் மின்வசதிகள் என பன்முக அபிவிரித்திகளை கண்டு தம்மை மாற்றி கொண்டனர்.சிந்தைகளை சுழற விட்டனர். மலேசியாவில் ஏராளமான புங்குடுதீவு மக்கள் தொழில் நிமித்தம் அந்த காலத்திலேயே வசித்து வந்தனர் அனைவரையும் அன்போடு அழைத்து புங்குடுதீவு ஐக்கிய சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினர் .இந்த சங்கத்தின் பெரும் பணியாக யாழ் பண்ணை .புங்குடுதீவு பாலங்களை அமைக்க வேண்டும் என்ற திட்டத்தினை முன் வைத்தனர் .

மலேசியாவில் தான் கண்ட அனுபவங்களைத் தமது சொந்த ஊரக்கு கிடைக்கச் செய்ய வேண்டுமெனப் பேரவாக் கொண்டிருந்தார். குறிப்பாக அங்கு காணப்படும் தாம் போதிகளைப் போல புங்குடுதீவுக்கும் – வேலணைக்கும் இடையில் அமைக்கப்படுதல் அவசியம் என்பதை உணர்ந்தார். இதனை செயல்படுத்த மலாயாவிலுள்ள புங்குடுதீவு மக்களை ஒன்று திரட்டி மலாயா -புங்குடுதீவு ஐக்கிய சங்கம் என்ற அமைப்பினை உருவாக்கி புங்குடுதீவு மக்களின் வளர்ச்சிக்கான உபாயங்களைக் கண்டறிந்தார்.
1918ஆம் ஆண்டில் புங்குடுதீவு திரும்பிய பெரியவாணர் முறைப்படி பாலத்தை அமைக்க வேண்டுமென வீடுகள் தோறும் கையொப்பங்களை வாங்கி அரசுக்கு சமர்ப்பித்துவிட்டு மலாயா சென்றார். அரசு இதில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. மலாயாவில் இயங்கி வந்த மலாயா – புங்குடுதீவு ஐக்கிய சங்கத்தை பலப்படுத்தி பாலம் அமைக்கப்படல் வேண்டும் என்பதில் அக்கறை கொண்டு நாடு திரும்பினார்.
1924, 1926, 1930, 1934, ஆம் ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான கையொப்பங்கள் வாங்கப்பட்டு மீண்டும் மீண்டும் அரசினை வற்புறுத்தத் தொடங்கினார். புங்குடுதீவில் கையொப்பங்கள் சேர்ப்பதில் சின்னவாணர் செயற்பட கொழும்பில் அரச பிரதிநிதிகளுடன் சந்திப்புக்கள்.
பத்திரிகையாளர்களுக்கு குரல் கொடுத்தல், போக்குவரத்து அவலத்தை புகைப்படங்கள் மூலம் நாடு முழவதற்கும் அறியச் செய்தல் போன்றவற்றை பெரியவாணர் செய்து வந்தார்.
1922ஆம் ஆண்டில் புங்குடுதீவு மகாஜன சேவா சங்கத்தை ஆரம்பித்து வாணர் சகோதரர்கள் 1926இல் அகில இலங்கை மகாஜள சங்கமாக மாற்றி தீவுப்பகுதியினை குறிப்பாக புங்குடுதீவின் அவல நிலையைநாடறியச் செய்தனர். இவ்வமைப்பினுடாக அரச பிரதிநிதிகள், தேசாதிபதிகள் ஆகியோரை அழைத்து வந்து பிரச்சினைகளை அவர்களுக்கு எடுத்து கூறினார்கள்.
பாலம் அமைப்பது சம்பந்தமாக சட்ட நிரூபண சபை அங்கத்தவர்களுக்கு எடுத்துக் கூறுவதில் பெரியவாணர் தவறவில்லை. இதன் விளைவாக 1925ஆம் ஆண்டு சட்ட நிரூபண சபையில் பாலம் அமைப்பு பிரேரணை விவாதத்திற்கு வந்தது. அப்போது சின்னவாணர் எண்பதுக்கு மேற்பட்ட தந்திகளை தேசாதிபதிக்கு பல்வேறு நிறுவனங்களினூடாக அனுப்பியிருந்தார்.
புங்குடுதீவு-வேலணைப் பாலம் அமைக்கப்படல் வேண்டுமென்பதில் சட்ட நிரூபண சபையில் அங்கத்தவர்களாக இருந்த கண்டி மாவட்ட பிரதிநிதி திரு. பண்டிற்பட்டுவந்துடாவை ஆங்கிலேயப் பிரதிநிதி சேர் வில்லியம்ஸ், திரு. ஏ. ஈ. குணசிங்கா ஆகியோர் பல்வேறு ஆதாரங்களுடன் வாதாடி இறுதியாக அனுமதியையும், நிதியையும் பெற்று விட்டனர்.
இவ் அனுமதி பெறுவதற்கு உழைத்தவர் பெரியவாணர் என்றால் அது மிகையாகாது. 1935ம் ஆண்டு பால வேலை ஆரம்பமாகியது. சின்னவாணரே பால வேலையை முன்னின்று செய்தார். இவை மட்டுமல்லாது கல்வி வளர்ச்சி, தபாற் கந்தோர், தொலைபேசி வசதி போன்ற பல்வேறு வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டு உழைத்தவர் பெரியவாணர்.
இவ்வாறாகப் பல்வேறு வழிகளில் சமூகப்பணி செய்த திரு. க. அம்பலவாணர் தீவக வளர்ச்சியை கருத்திற் கொண்டு 1947ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார். மக்கள் அவரது சேவையைக் கருத்திற் கொள்ளாது தோல்வியுறச் செய்தனர். பேரியவாணர் மனித நேயம் படைத்தவர். பொதுத் தேர்தலில் தன்னுடன் போட்டியிட்டு வெற்றியீட்டிய திரு.
அல்பிரட் தம்பிஐயாவை அழைத்து பாராட்டி உபசாரம் செய்து புங்குடுதீவு மக்களின் அவல நிலையைப் போக்குமாறு கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகொளை ஏற்று திரு. அல்பிரட் தம்பிஐயா அயராது உழைத்து 1953 ஆம் ஆண்டு பாலத்தினை மக்கள் பயன் பாட்டுக்கு திறந்து வைத்தார்.
பெரியவாணர் அவர்கள் 30 ஆண்டுகள் தன்னலம் பாராது உழைத்து உடல் இளைத்து 1948ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இயற்கை எய்தினார். அவர் நம்மிடையே இல்லையாயினும் அவரது பெயரைக் கொண்டு விளங்கும் வாணர் பாலம் இருக்கும் வரை அவரது பெயரும் தொடர்ச்சியாக துலங்கி வரும்.


பல்வேறு வழிகளில் சமூகப்பணியாற்றிய பெரியவாணர் தீவக மக்களின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார். அப்பொழுது அவரால் 3701 வாக்குகளையே பெறமுடிந்தது.
பெரும்பாலும் புங்குடுதீவு மக்களே அவருக்கு வாக்களித்தனர். பொதுத்தேர்தலில் தன்னுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற அல்பிரட் தம்பி ஐயாவை அழைத்து தாம்போதி வேலையைப் பூர்த்தி செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.
காலூர் எம்.பி.அல்பிரட் தம்பிஐயா 1953 ஆம் ஆண்டு அம்பலவாணர் தாம்போதியை மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து வைத்தார்.அதற்கு முன்பே, அதாவது 1948இலேயே பெரியவாணர் மரணமானார். பெரியவாணர் அமைத்த பிரமாண்டமான தாம்போதி அன்றுமுதல் இன்றுவரை இளமையாகவே காட்சியளிக்கிறது.
எந்தப்போருக்கும் செல்லடிக்கும் குண்டுமழைக்கும் அது அசைந்து கொடுக்கவில்லை. அது அம்பலவாணரின் பெயரைச் சொல்லிக்கொண்டு இன்றும் கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கிறது.----

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக