மீண்டும் மடத்துவெளி இளைஞர்களின் சாதனை
சுவிசில் இன்று(28.01-2012) நடை பெற்ற கிட்டு ஞாபகார்த்த கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் லீஸ் இள நட்சத்திர கழகம் ( 15 வயது அணி )சாதனைகள்
எந்த ஒரு கோலையும் எதிரணியிடம் பெறாது இறுதியாட்டம் வரை முன்னேறி பலம் மிக்க மற்றுமொரு அணியான இளம் சிறுத்தைகள் அணியை5 -0 என்ற ரீதியில் அமோகமாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது .அரையிறுதியில் நடைபெற்ற போட்டியில் கூட இளம்தென்றல் அணியுடனான பனால்டி உதை மூல வெற்றி நிர்ணயிப்பில் எதிரணியின் அத்தனை உதைகளையும் தடுத்து நிறுத்தி இறுதியாட்டம் சென்றது மற்றுமொரு சாதனை நிகழ்வாகும்.ஏனைய அணிகள் யாவும் வேற்று இனத்து சிறந்த வீரர்களை தெரிவுசெய்து தங்கள் அணியில் விளையாட கொண்டு வந்திருந்த போதும் இந்த அணி தனியே தமிழ் வீரர்களை மட்டுமே இணைத்து விளையாடி இருந்தது மற்றுமோர் பதிவாகும் . இந்த சுற்று போட்டியின் மேலதிக முழு விபரங்களும் புகைப்படங்களும் பின்னர் வெளியிடுவோம் -புங்குடுதீவு மடத்துவெளி இளைஞர்களான இந்த அணியின் தலைவராக சந்திரபாலன் திலீபனும் பந்துக் காப்பாளராக கனகராசா சாதுரிகனும் பயிற்சியாளராக சிவ-சந்திரபாலனும் பங்கேற்றனர் (படத்தில் இடப்பக்கம் -சிவ.சந்திரபாலன் இடமிருந்து வலமாக நான்காவதாக சாதுரிகன் ஐந்தாவதாக திலீபன் .ஆறாவதாக ஜெயபாலன் மதுசன் .புங் 3/10)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக