முள்ளிவாய்கால் இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசால் சிறைப்பிடிக்கபட்ட அப்பாவி தமிழ் இளைஞர்களை தென் இந்திய தமிழ் சினிமா பாடலுக்கு அட்டம் போட வைத்து வேடிக்கை பார்கிறது இலங்கை அரசு.
குறித்த பாடலுக்கான ஆடலையே இலங்கை அரசு தமது புனர்வாழ்வு செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக எடுத்துக் காட்டியுள்ளது. உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் பல கோடி கணக்கான பணத்தினை தமிழ் இளைஞர் யுவதிகளின் புனர்வாழ்வுக்கு என பெற்றுள்ள இலங்கை அரசு அதனை, தென் இலங்கையில் தமது தேவைகளுக்கு பயன்படுத்தி வருகிறது.
புனர்வாழ்வு என கூறிக்கொண்டு தமது வருவாயை திரட்டுவதற்காக அப்பாவி தமிழ் இளைஞர்களை தடுத்து முகாம்களில் அடைத்து வைத்து அவர்களின் வாழ்வின் பொன்னான காலத்தை சிறைக்குள் மண்ணாக்கி பிழைப்பு நடத்துவதை இது உறுதி செய்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக