Monday, June 13, 2011, 22:09உலகம்
பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி நாளை (14-06-2011) இரவு ஒளிபரப்பவுள்ள ‘இலங்கையின் படுகொலைக்களம்’ என்ற நிகழ்ச்சியைப் பார்க்குமாறு தனது இரசிகர்களிடம் மயா (MIA) என அழைக்கப்படும் உலகப் புகழ்பெற்ற முதலாவது ஈழத்து பொப் பாடகி மாதங்கி அழைப்பு விடுத்துள்ளார்.
http://twitter.com/#!/_M_I_A_
ருவிற்றர் (Twitter) வலையில் மட்டும் இரண்டு இலட்சத்து ஆறாயிரத்திற்கு மேற்பட்ட இரசிகர்களைக் கொண்டுள்ள அனைத்துலக தமிழ் பாடகியான மயா, ருவிற்றர் இணையவலை மூலம் தனது இரசிகர்களிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருப்பதுடன், பிரித்தானியா தவிர்ந்த ஏனைய நாடுகளிலுள்ளவர்கள் பார்ப்பதற்கு ஏதுவாக சனல-4 (Channel-4) தொலைக்காட்சியின் இணைய இணைப்பையும் அதில் இணைத்திருக்கின்றார்.
கரும்புலிகள் உட்பட விடுதலைப் புலிகள் பற்றியும், அவர்கள் உயீரீகம் தொடர்பாவும், தமிழ் மக்களின் உரிமைக்காகவும் குரல்கொடுத்துப் பாடிவரும் மயா பல இன்னல்களை அதனால் அனுபவித்திருந்தார்.
பொப் பாடகரான அமெரிக்கர் ஒருவரைத் திருமணம் முடித்துள்ள போதிலும், மயாவிற்கும், அவரின் தாயாருக்கும் அமெரிக்கா செல்ல அந்த நாட்டின் அரசாங்கம் பயங்கரவாத முத்திரை குத்தி அனுமதி மறுத்திருந்தமை ஈழம் டெய்லி இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றது. ஆனால் இவை ஒன்றிற்கும் அஞ்சாத மயா, தமிழ் மக்களிற்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றார்.
அது மட்டுமன்றி தமிழ்நாட்டின் மற்றொரு தமிழனும் உலக மட்டத்தில் புகழ்பெற வேண்டும் என்பதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை ஒஸ்கார் உட்பட பல பன்னாட்டு விருதுகளுக்கு பரிந்துரைத்துப் போட்டியிடும் பணிகளிற்கு முன்னின்று உதவியதால், ஒஸ்கார் விரதைப் பெறும்போது ரஹ்மான் மயாவிற்கு நன்றி கூறியது பலருக்கு நினைவிருக்கலாம்.
முற்று முழுதான வேறுபட்ட சூழலில் தொழில் நிமித்தம் வாழ்ந்தாலும், தனது இனத்தையும், மொழியையும், நாட்டுப்பற்றையும் மறக்காத மயாவின் பணிகள் வாழ்த்துக்குரியன.
மயா எனப்படும் மாதங்கியின் தந்தை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்துகொண்ட ஈரோஸ் அமைப்பின் முன்னாள் போராளி என்பதுடன், அருள்பிரகாசம் என்ற இவர் அருளர் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தார்.
தமிழ்த்தாய்.http://www.tamilthai.com/?p=19206

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக