ஈவிகேஎஸ் வார்த்தையை அளந்து பேச வேண்டும் : திருமாவளவன்
முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், கடந்த 14ம் தேதி அன்று ஈரோடு ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் சார்பில், ஈரோடு ரயில் நிலையத்தில், நடைபெற்ற சேலம் கோட்ட சிறப்பு விளக்க கூட்டத்தில் பேசியபோது,
’’காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி இல்லாவிட்டால், கூண்டோடு உள்ளே போகவேண்டிவரும் என்பதால் தான் கூட்டணி தொடரும் என்று பேசிவருகிறார் கலைஞர்.
கூடா நட்பு உங்களுக்கு லேட்டாகத்தான் தெரிகிறது. அனால் நான் ஒரு மாதம் முன்பே சவகாச தோஷம் பற்றி பேசிவிட்டேன்’’ என்று கூறினார்.
இது குறித்து இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
’’ஈவிகேஎஸ்.இளங்கோவன் அளவுக்கு அதிகமாகப் பேசுகிறார். அவர் வார்த்தையை அளந்து பேச வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், ‘’வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடனான கூட்டணி தொடரும்’’ என அவர் அறிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக