திங்கள், 13 ஜூன், 2011


ஆயுத புரட்சிக்கு தயாராகும் கோட்டாபய? - இராணுவ லெப்டினன்ட் கேணல் கொலை


இலங்கை பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி ஆரம்பிக்கபட்டுள்ளதை தொடர்ந்து மாணவருக்கு பயிற்சி கொடுத்த இராணுவ அதிகாரி பொலன்னறுவைக்கு அருகில் மர்ம வாகனமொன்றால் மோதுண்டு மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளார். 

இராணுவத்தின் கெடேற் படைப்பிரிவின் 13ஆவது படையணியின் கட்டளையிடும் அதிகாரியாகக் கடமையாற்றிய லெப்டினன்ட் கேணல் தர அதிகாரி லெனாட் என்பவரே பிரஸ்தாப மர்ம விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ரந்தம்பையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியை வழங்குவதில் ஈடுபட்டிருந்த அவர் அதனை நிறைவு செய்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போதே மர்ம வாகனத்தினால் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

அவரை மோதிய வாகனம் தப்பிச் சென்றுவிட்ட நிலையில் வீதியோரமாக வீசப்பட்டுக் கிடந்த பிரஸ்தாப அதிகாரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் மரணத்தைத் தழுவிக் கொண்டார்.

அண்மைக் காலமாக இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலரும் இவ்வாறான வாகன விபத்துக்களில் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

வெளிநாட்டு சக்திகளின் ஊடுருவல் இந்த விடயத்தில் இருக்கலாம் என தெரியவருகிறது.-thx tamilenn

உள்துறை அமைச்சின் ஊடாக நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தல் ஆணையாளர் விடுக்கும் அறிக்கை
[ திங்கட்கிழமை, 13 யூன் 2011, 03:16.04 PM GMT ]
நாடு கடந்த அரசாங்கத்தின் ஏப்ரல் 02, 2011 அறிக்கையின்படி சத்தியப்பிரமாணம் செய்யாத காரணத்தால் தாமாகவே பதவி துறந்தார்கள் என அறிவிக்கப்பட்டவர்களின் வெற்றிடங்கள், தேர்தலில் போட்டியிட்டும் தெரிவு செய்யப்படாமல் அடுத்த நிலையிலுள்ளவர்களாலும், போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டவர்களின் தொகுதிகளில் போட்டியிருப்பின் தோ்தல் மூலமும் நிரப்பப்படும்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையாளர் திருமதி ஸ்ரீதாஸ், 11-06-2011 அன்று ஒப்பமிட்டு 13-06-2001 அன்று வெளியீட்டிற்காக உள்துறை அமைச்சின் ஒன்ராறியோ செயலருக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் ஊடக அறிக்கை இணைக்கப்பட்டுளளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினருக்கான வெற்றிடங்களை நிரப்புதல்
சர்வதேச அங்கீகாரத்துடன் சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழத்தை அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதன் மூலம் அதன் இலக்கை அடைவதில் பங்கு கொள்ளும் ஆர்வத்துடன் முன்வந்தவர்களே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் (நா. க. த. அ) தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும்.
நா. க. த. அரசாங்கத்தின் உள்துறை அமைச்சரால் ஏப்ரல் 02, 2011 அன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின்படி, பதவியேற்கத் தவறியோரின் 29 வெற்றிடங்களை நிரப்புவது இத் தேர்தல் ஆணையத்தின் நிகழ்ச்சி நிரலின் முதன்மைப் பணியாகும்.
சனநாயக அடிப்படையில் நடாத்தப்பட்ட இத்தேர்தலில், ஒரே இலக்கைக் கொண்ட பல வேட்பாளர்களிடையே நடைபெற்ற போட்டியில் பெரும்பான்மை வாக்குகளுடன் மக்களின் அங்கீகாரம் பெற்றவர்கள் அரசவை செல்லத் தகுதி பெற்றார்கள்.
நா. க. த. அரசாங்கத்தின் அரசவை அங்கத்துவத்தில், தற்போது ஏற்பட்டிருக்கும் வெற்றிடங்களை, அதன் முதலாவது தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவு செய்யப்படாத வேட்பாளர்களை, அவர்கள் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில், உறுப்பினர்களாவதற்குத் தகுதி பெற்றவர்களாகக் கொண்டு, நிரப்புவதென, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் உள்ளதே போன்று, கடந்த தேர்தல் பட்டியலிலிருந்து வெற்றிடங்களை நிரப்புவது, சர்வதேச சனநாயகக் கோட்பாடுகளுக்கு உட்பட்டதே ஆகும்.
மேலும், கடந்த தேர்தலில் போட்டி எதுவும் இன்றி நியமனம் பெற்றோரின் வெற்றிடங்களை நிரப்புவதற்குச் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு வேட்பு மனு கோரப்பட்டுப் போட்டியிருப்பின் மீள்தேர்தல் நடாத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருமதி. செ. ஸ்ரீதாஸ்
தேர்தல் ஆணையாளர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம்.

"இலங்கையின் படுகொலைக்களம்" தொடர்பாக பிரித்தானியப் பத்திரிகைகளில் செனல்-04 விளம்பரம்
[ திங்கட்கிழமை, 13 யூன் 2011, 04:38.41 PM GMT ]
செனல்-04 தொலைக்காட்சியில் நாளை ஒளிபரப்பாகவுள்ள 'இலங்கையின் படுகொலைக்களம்" தொடர்பாக இன்று பிரித்தானியாவின் முன்னணி நாளேடுகளில் செனல்-04 வினால் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
த சண்டே ரைம்ஸ்,த இன்டிபென்டன் , மற்றும் மெயில் ஒன் சண்டே போன்ற பிரித்தானியாவின் பிரதான நாளேடுகளில் பிரஸ்தாப விளம்பரம் இன்று வெளியாகி இருந்தது. பல மில்லியன் மக்களைச் சென்றடையும் வகையில் இந்த விளம்பரங்களை வெளியிடப்பட்டுள்ளது.
ஈழத்தமிழ் மக்கள் மீது இடம்பெற்ற படுகொலைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது மட்டுமன்றி அது தொடர்பாக ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியை வேற்றினத்தவர் பார்க்க வைப்பதற்கு பெரும் பணச்செலவில் இவ்வாறான விளம்பரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இதேவேளை பிரித்தானிய மக்களும். ஏனைய வேற்றினத்தவர்களும் இந்தக் காணொளி விவரணப்படத்தை பார்வையிட வைப்பதற்காக பிரித்தானிய தமிழர் பேரவையும் கடந்த நாட்களில்  தொடர்ச்சியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது.
அதற்காக மக்களைத் தெளிவுபடுத்தும் விதமாக  பல இலட்சம் துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப்பட்டு வருவதாக பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்தது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா உதவக் கூடாது: வைகோ கோரிக்கை
[ திங்கட்கிழமை, 13 யூன் 2011, 04:26.17 PM GMT ]
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா உதவக்கூடாது என்பதை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்துமாறு ஜெயலலிதாவிடம் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை- இந்திய நாடுகளின் அமைச்சர்கள் மட்ட சந்திப்புகளின் போது அண்மையில் மின்சாரம் வழங்கல் மற்றும் இலங்கையின் இரயில் பாதைகளைப் புனரமைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
அவ்வாறான நடவடிக்கைகள் மூலம் இலங்கையின் பொருளாதாரம் வளரும் என்பதனால் இலங்கையுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் இரத்துச் செய்ய பிரதமர் மன்மோகன் சிங் இடம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திக்கச் செல்வதை முன்னிட்டே அவர் இவ்வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
சிவசங்கர் மேனனின் இலங்கை விஜயம் எதிர்பார்த்தளவுக்கு வெற்றியைத் தரவில்லை. அதற்கடுத்ததாக இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிகின்றோம். ஆனால் யார் சென்றாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கு ஒப்புக் கொள்ள மாட்டார்.
அதன் காரணமாக தமிழ் மக்களுக்கான தீர்வாக ஐ.நா. மூலம்  வாக்கெடுப்பு நடாத்தி தனிநாடொன்றை ஸ்தாபிப்பது ஒன்றே வழியாகும் என்றும் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளின் மறுவாழ்வுக்காக பிரிட்டன் தொண்ணூறு மில்லியன் நிதியுதவி
[ திங்கட்கிழமை, 13 யூன் 2011, 01:21.27 PM GMT ]
விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளை ஒருங்கிணைத்து மறுவாழ்வு அளிக்கும் செயற்திட்டமொன்றுக்காக பிரிட்டன் தொண்ணூறு மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளது.
பிரஸ்தாப  நிதி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் புனர்வாழ்வு மற்றும் மறுவாழ்வுப் பணிகளின் ஒரு பகுதியாக சர்வதேச குடியகல்வு திணைக்களத்தின் செயற்திட்டமொன்றுக்கு வழங்கப்படவுள்ளதாக மேலும் அறியக் கிடைத்துள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய உதவித்தூதுவர் மார்க் கட்டிங் இன்று யாழ்ப்பாணத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போதே மேற்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஏற்கெனவே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் கண்ணிவெடியகற்றல் நடவடிக்கைகளுக்காக பிரிட்டன் பாரியளவான நிதி அன்பளிப்பு ஒன்றை வழங்கியுள்ள நிலையில் தற்போதைய அறிவிப்பின் பிரகாரம் மேலதிகமாக தொண்ணூறு மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளது.
இன்றைய யாழ். விஜயத்தின் போது பிரித்தானியாவின் உதவித் தூதுவர் தெல்லிப்பளை பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்த மக்களைச் சந்தித்து உரையாடியிருந்ததுடன், யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்களையும் சந்தித்திருந்தார்.

இடிஅமீன் மற்றும் மார்க்கோஸ் இற்கு நடந்த கதி மஹிந்த குழுவிற்கும் விரைவில் நடக்கும்: டில்வின் சில்வா
[ திங்கட்கிழமை, 13 யூன் 2011, 12:57.30 PM GMT ]
வரலாற்றில் இகழப்பட்ட சர்வாதிகாரிகளான உகண்டாவின் இடிஅமீன் மற்றும் பிலிப்பைன்சின் மார்க்கோஸ் இற்கு நடந்த கதி மிக விரைவில் மஹிந்த குழுவினருக்கும் நடக்கும் என்று டில்வின் சில்வா எதிர்வு கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு மனோவியாதி பிடித்திருப்பதாகவும், அதன் காரணமாக மிக விரைவில் சரிவை எதிர்கொள்வார்கள் என்றும் ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் டில்வின் சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் எடுக்கும் அனைத்துத் தீர்மானங்களையும் அனைவரும் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்ற மனோவியாதி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு இருக்கின்றது. அதன் காரணமாக எதிர்க்கருத்துக்களை சகித்துக் கொள்ளும் பக்குவம் அவர்களிடம் இல்லை.
அரசாங்கத்துக்கு எதிரான விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் மனோபக்குவம் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களிடம் இல்லை. அதன் காரணமாகவே அரச அதிகாரம்,  நீதிமன்றம், பொலிசார் மற்றும் உத்தியோகபூர்வமற்ற குண்டர்களைக் கொண்டு அவ்வாறான கருத்துடையோரை பழிவாங்க முற்படுகின்றனர்.
இவ்வாறான குணாதிசயங்களைக் கொண்டிருந்த உகண்டாவின் இடி அமீன் மற்றும் பிலிப்பைன்சின் மார்க்கோஸ் போன்ற சர்வாதிகாரிகள் தற்போது வரலாற்றின் குப்பைக்கூடைக்குள் எறியப்பட்டு விட்டார்கள். அவ்வாறான ஒரு நிலை மிக விரைவில் மஹிந்த ராஜபக்ஷ குழுவினருக்கும் ஏற்படும் என்றும் டில்வின் சில்வா விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் முயற்சி காலத்தை வீணடிப்பதற்கான நடவடிக்கை - த.தே.கூட்டமைப்பு _ 
வீரகேசரி இணையம் 6/13/2011 8:02:06 AMShare
  இனப்பிரச்சினை தீர்வுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கும் அரசாங்கத்தின் முயற்சியானது காலத்தை வீணடிப்பதற்கான நடவடிக்கையாகும். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கடந்த காலங்களில் பல குழுக்கள் அமைக்கப்பட்ட போதிலும் அவற்றின் அறிக்கைகளோ பரிந்துரைகளோ இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. இதேபோல் நிபுணர்கள் குழு, சர்வகட்சி பிரதிநிதிகள் குழு என குழுக்கள் அமைக்கப்பட்டபோதிலும் அவற்றினால் கண்ட பலன் எதுவுமில்லை.

எனவே எதிர்காலத்திலும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பதென்பது தேவையற்ற நடவடிக்கையாகும் என்றும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று முன்தினம் அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது இனப்பிரச்சினைக்கு தீர்வினைக் காண பாராளுமன்ற தெரிவுக்குழுவினை அமைக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான சந்திப்பையடுத்து இந்திய தூதுக்குழுவினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பின்போது இனப்பிரச்சினை தீர்வுக்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக இந்திய தூதுக்குழுவினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளனர். இதற்கு கூட்டமைப்பு எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் பாராளுமன்ற தெரிவுக்குழு என்பது காலத்தை இழுத்தடிப்பதற்கான முயற்சியாகும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியதாவது,

இனப்பிரச்சிரச்சினை தீர்வுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி இந்திய தூதுக்குழுவினரிடம் தெரிவித்துள்ளார். இதனை ஏற்றக்காள்ள முடியாதென நாம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளோம். மறைந்த ஜனாதிபதி பிரேமதாசாவின் ஆட்சிக் காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள முனசிங்கவின் தலைமையில் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. ஆனால் அதனால் பயனெதுவும் ஏற்படவில்லை.

இதேபோல் தற்போதைய ஜனாதிபதியினால் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. இதனைவிட சர்வகட்சி பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுக்கள் தமது அறிக்கையினை சமர்ப்பித்துள்ளபோதிலும் அவை எதுவும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனைவிட ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் அரசியல் தீர்வுப்பொதி தயாரிக்கப்பட்டது. அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் ஜாதிக ஹெல உறுமய உட்பட பல கட்சிகள் அங்கம் வகித்திருந்தன. அந்த அறிக்கையும் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.

தற்போது அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது. அதிலும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் ஏற்படவில்லை இந்த நிலையில் இனப்பிரச்சினை தீர்வுக்கு மீண்டுமொரு பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதென்பது காலத்தை வீணடிக்கும் முயற்சியாகும். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாது.

இதுகுறித்து இந்திய உயர்மட்ட குழுவினரிடம் தெரியப்படுத்தியுள்ளோம். இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலும் வடக்கில் இடம்பெற்று வரும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத விடயங்கள் தொடர்பாகவும் நாம் எடுத்துக்கூறிய விடயங்களை இந்திய தூதுக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது. எம்முடன் ஒத்துழைத்து செயற்படவும் குழு உறுதியளித்துள்ளது. _

இறுதிக்கட்டப் போரின் போது சரணடைந்து;தடுத்து வைக்கப்பட்டோர் விவரம் வவுனியா, கொழும்பு, பூஸாவில்;பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கடிதத்துடன் செல்லுங்கள்
news
 இறுதிக் கட்டப்போரின்போது படையினரிடம் சரண்அடைந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள், கைதாகி விடுவிக்கப்பட்டோர் குறித்த தகவல்களை அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் பெற்றுக்கொள்ளமுடியும்.

கொழும்பு, வவுனியா, பூஸா ஆகிய இடங்களில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தொடர்பு கொண்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விவரங்களை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் பணிப்பாளர் இது தொடர்பாக அறிவித்துள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் மனைவி, கணவர், பிள்ளைகள், பெற்றோர் அல்லது சகோதர, சகோதரிகள் தாம் வசிக்கும் பிரதேச பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அல்லது கிராம சேவகரின் கடிதத்துடன் மேற்கண்ட இடங்களிலுள்ளபயங்கரவாத விசாரணைப் பிரிவுக்குச் சென்று தகவல்களைப் பெற் றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுத் தொடர்களின் போது போரின் இறுதிக் கட்டத்தின் போது படையினரிடம் சரண் அடைந்தவர்களின் விவரங்களை வெளியிடுமாறு கூட்டமைப்புக் கோரிவந்தது. 

வவுனியா பயங்கரவாதத் தடுப்பு பிரிவுக்கு வருமாறு கூட்டமைப்புக்கு அரசு அழைப்பும் விடுத்திருந்தது. இரு தடவைகளும் கூட்டமைப்பினர் வவுனியாவுக்குச் சென்றபோதிலும் பட்டியல் ஏதும்கையளிக்கப்படவில்லை. தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் விவரம் பத்திரிகைகளில் வெளியிடப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது. அதன் பிரகாரம் பயங்கவரவாத விசாரணைப் பிரிவு, தடுத்துவைக்கப்பட்டுளளவர் விவரங்களை அவர்களது உறவினர்களுக்குத் தெரிவிக்க மூன்று நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக இப்போது அரசு அறிவித்துள்ளது.கைதாகித் தடுத்துவைக்கப்பட்டுள்ள வர்கள், தடுத்துவைக்கப்பட்டு விடுவிக் கப்பட்டவர்கள் ஆகியோரின் விவரங்களை மேற்குறிப்பிட்ட மூன்று நிலையங் களிலும் இன்றிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரி உதயனுக்குத் தெரிவித்தார்.கைதானவர்களின் நெருங்கிய உறவினர்களான மனைவி, கணவர், பிள்ளைகள், பெற்றோர், சகோதர, சகோதரிகள் ஆகியோர் தகவல்களைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தத்தமது பிரதேசத்தின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அல்லது கிராம உத்தியோகத்தர்களின் சிபார்சுடன்  கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடங்க ளுக்குச் சென்று விவரங்களைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பயங்கரவாத விசாரணைப் பிரிவு 2ஆம் மாடி, புதிய செயலகக் கட்டடம், கொழும்பு 1, தொலைபேசி 011238 4400, மின்னஞ்சல் :dir.tid@police.lk
  •  பயங்கரவாத விசாரணைப் பிரிவு: கண்டி வீதி, வவுனியா(பிரதிப் பொலிஸ் மா அதிபர் செயலகம் முன்னால்) தொலைபேசி 0243243207  
  • பயங்கரவாத விசாரணைத் தடுப்பு முகாம்  ரேஸ்கோஸ் வீதி, காலி. தொலைபேசி 0912267084
மேற்படி அறிவித்தலின் பிரகாரம்,  குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று விவரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்டவர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கேட்டுள்ளனர்.    

அகதிகள் 300 பேரின் நாடுகடத்தலை நிறுத்துக! பிரிட்டனிடம் ஐரோப்பிய தமிழர் பேரவை கோரிக்கை; இல்லையேல் பாராதூரமான விளைவு ஏற்படும் என எச்சரிக்கை
news
 பிரிட்டிஷ் அரசு உத்தேசித்திருக்கும் ஈழத்தமிழ் அகதிகளின் நாடுகடத்தலை நிறுத்துமாறு ஐரோப்பிய தமிழர் பேரவை அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
 
300 ஈழத்தமிழர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி ஒரே விமானத்தில் ஏற்றி நாடு கடத்தவிருக்கும் பிரிட்டன் அரசின் மனிதாபிமானமற்ற நடவடிக்கையை வன்மையாகக்  கண்டிக்கிறோம் என்றும் இந்த எண்ணிக்கையில் எந்தவொரு நாடும் இந்த நூற்றாண்டில் நாடுகடத்தப்படவில்லை என் பதைக் சுட்டிக் காட்டுகிறோம் என்றும் பேரவை தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக ஐரோப்பிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:
 
இலங்கைத் தீவில் தமக்கென வரையறை செய்யப்பட்ட பாரம்பரிய பூமியில் மொழி, மத கலாசார அடையாளங்களுடன் வாழ்ந்த தமிழர்களின் வரலாற்றை மாற்றியவர்கள் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தினரே.நிர்வாக நலனுக்காக தமிழர்களையும் சிங்களவர்களையும் ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டுவந்த ஆட்சியர்கள் விட்டுச் செல்லும்போது தமிழர்களைச் சிங்களவர்களின் ஆட்சிப் பொறுப்பில் விட்டுச் சென்றுள்ளதன் பலனை தமிழ் மக்கள் இன்றுவரை அனுபவிக்கின்றனர்.
தனது வரலாற்றுத்தவறை மறந்த இப்போதைய பிரிட்டிஷ் அரசு நாடுகடத்தலை மேற்கொண்டு எமக்கு மேலதிக துன்பச் சுமையைத் தருகிறது. இலங்கையில் இயல்பு வாழ்க்கைக்கு இடமில்லை. மிகவும் கொடுங்கோன்மையான இராணுவ ஆட்சி தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கில் நடைபெறுகின்றது.
 
யாழ். குடாநாட்டில் மாத்திரம் 57,000 பொது மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் முகாம்களில் வாழ்கின்றனர். வவுனியா தடுப்பு முகாம்களில் 30,000 வரையிலானோர் முடக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை ஆகிய பகுதிகளில் பெருந்தொகையான உள்நாட்டு அகதிகள் நிச்சயமற்ற வாழ்க்கை நடத்துகின்றனர்.
ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமிற்கு மாற்றுவதை இலங்கை அரசு மீள்குடியேற்றம் என்று சொல்கிறது. அரசியல் நிலைவரம் இன்னும் மோசமாக இருக்கிறது. தற்போதைக்கு அதிகாரப் பகிர்வு குறித்த சட்ட மூலங்களைச் சமர்பிக்கப் போவதில்லை என்று இலங்கை அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது.

ஐ.நா நிபுணர் குழு அறிக்கைப்படி இலங்கை அரசு உயர்மட்டத்தினரும் இராணுவத்தினரும் போர்க் குற்றங்கள், மனிதநேயச் சட்ட மீறல்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றைப் புரிந்துள்ளனர் நீதித்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டதையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.இலங்கை அரசு வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் 300 அப்பாவித் தமிழர்களை நாடுகடத்துவது பாராதுராமான விளைவுகளை ஏற்படுத்தும். இலங்கை அரசின் வன்முறைக் கும்பல்களின் தாக்குதலுக்கும் காணாமற் போதலுக்கும் அவர்கள் உள்ளாவது நிச்சயம்.நாடுகடத்தல் நடைபெறும் பட்சத்தில் இந்த 300 பேரின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் வழங்க பிரிட்டிஷ் அரசு முன்வருமா? உயிராபத்து உள்ள நாட்டிற்கு ஏதிலிகளின் விருப்பத்திற்கு மாறாக அனுப்புவதை மனித உரிமைச்சட்டங்கள் தடை செய்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம்.மன்னிக்க முடியாத வரலாற்றுத் தவறை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டாமென்றும் பிரிட்டிஷ் அரசு உத்தேசித்திருக்கும் ஈழத்தமிழ் அகதிகளின் நாடுகடத்தலை நிறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
 இப்படி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

சர்வதேச நாடுகள் தந்திரோபாய ரீதியிலேயே இலங்கையின் கொடிய யுத்தத்துக்கு அனுமதி;எழுத்தாளர் அருந்ததி ராய் தெரிவிப்பு
news
 
சர்வதேச நாடுகள் தமது பொருளாதார மற்றும் இரா ணுவ நலன்சார்ந்த தந்திரோபாய ரீதியில் இலங்கையில் இடம் பெற்ற கொடிய யுத்தத்துக்கு, அதனூடான இனப்படுகொலைக்கும் அனுமதித்துள்ளது என்று பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் தெரிவித்துள்ளார்.
 
மேலும் இந்த விடயத்தை முன்மாதிரியாகப் பின்பற்றி பிராந்திய நாடுகளும் செயற்பட வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
 
சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் லண்டன் சவுத்ஹோல் பகுதியில் நடைபெற்ற சந்திப்பில் லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர்களும், சிங்கள ஊடகவியலாளர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
 
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,  இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் எனவும், அங்கு இடம்பெற்ற இந்தக்கொடுமையைப் போல் ஒன்றை நான் வேறெங்கும் காணவில்லை. 
 
இலங்கையில் இடம்பெற்ற கொடிய போரைப்பற்றி எமக்குத் தெரியும். வைத்தியசாலைகள் மீது பலத்த குண்டுவீச்சு, எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. குறுகிய திறந்தவெளி நிலப்பரப்பை போர்அற்ற பாதுகாப்புப் பிரதேசமாக அறிவித்து அந்தப்பகுதிகளுக்குள் மக்களை வரச்சொல்லி பின் அந்தப் பகுதிக்குள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையும் நாம் நன்றாக அறிந்துள்ள விடயம் தான்.
 
இலங்கைத் தமிழர்களின் இன்னல்களை சொல்லிக் கொண்டு அரசியலில் தம்மை நிலை நிறுத்திக்கொண்ட தமிழகத் தலைவர்களை நான் நன்கு அறிந்துள்ளேன். 
 
இதே வேளை தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தங்கியுள்ள முகாம்களுக்கு நான் சென்ற போது அங்கு அவர்கள் மிருகங்களைப் போல் நடத்தப்படுவதை அவதானித் தேன். 
இந்த விடயத்தில் தமிழக அரசியல்வாதிகள் அக்கறை கொள்ளவில்லை எனவும் அருந்ததி ராய் மேலும் தெரிவித்தார்


பொருளாதாரத் தடைத் தீர்மானம் இயற்றிய ஜெயலலிதாவை நாடாளுமன்றத்தில் பாராட்டினார் சிவசக்தி ஆனந்தன் எம்.பி.
news
இலங்கை அரசின் மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஒரு மனதாகத் தீர்மானம் இயற்றப்பட்டதற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்தையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணையின் மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு அதற்கு எதிராக உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையில் நடைபெறுகின்ற பேச்சு தமிழ் மக்கள் மத்தியில் ஆரம்பத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், இன்று கேலிக்குள்ளாகியுள்ளது.  மக்கள் இதில் நம்பிக்கை இழந் துள்ளனர். ஆறு சுற்றுப் பேச்சுகள் முடிந்த நிலையிலும் தடுப்பிலுள்ளவர்கள் மற்றும் காணாமற்போனோர்களின் பெயர் விவரத்தைக்கூட அறிய முடியாமல் உள்ளதே இதற்குக் காரணமாகும். 
 
தமிழ் மக்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்துவந்த பிரதேசங்கள் இன்று பறிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புத்த மதத்துடன் தொடர்பே இல்லாத தமிழர் பிரதேசங்களில் காணிகள் பலாத்காரமாகப் பிடுங்கப்பட்டு புத்த விகாரைகள் கட்டப்படுகின்றன.
 
மக்கள் மீள்குடியமர்ந்த வடமாகாணத்தின் பெரும்பாலான காணிகளின் சொந்தக்காரர்களான தமிழ் மக்களில் பலருக்கு இன்னமும் தற்காலிக காணி அனுமதிப்பத்திரமோ அல்லது அவரவர் சொந்தக் காணிகளில் குடியேறவோ அரசால் அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றமை அனைவரும் அறிந்த உண்மையாகும்.  
 
இதனைவிடப் பாரம்பரிய பூர்வீகத் தமிழர்வாழ் நிலப்பரப்புக்கள் பல ஆயிரம் ஏக்கர்வரை செட்டிகுளம், கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு, கிழக்கு, அம்பலவன் பொக்கணை, கேப்பாபுலவு, திரு முறிகண்டி, மன்னாரில் முள்ளிக்குளம், மடு போன்ற பிரதேசங்களில் இராணுவத்தினரால் அத்துமீறிக் கையகப்படுத் தப்பட்டு இராணுவ கேந்திர தளங்கள் அமைப்பதற்கும் இராணுவத்தினரின் குடும்பங்களை நிரந்தரமாகத் தங்கவைப் பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. செட்டிகுளம் நலன்புரி நிலையத்தின் நான்கு வலயங்களை உள்ளடக்கிய சுமார் 1500 ஏக்கர் காணியை வழங்குமாறு இராணுவம் அதிகாரிகளைக் கட்டாயப்படுத்துகின்றது.
 
இதன் ஒரு வடிவமாக நெடுங்கேணி பிரதேச செயலர் பிரிவிலுள்ள கொக்கச்சாண்குளம் என்னும் தமிழ்க் கிராமம் "கலாபோவசேவ' என்ற பெய ரில் சிங்களக் கிராமமாக மாறியுள்ளது.
 
மேற்கண்ட செயல்கள் அனைத்தும் சில உதாரணங்கள் மட்டுமே. யுத்தத்துக்குப் பின்னரே முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. இவையெல்லாம் களைந்தெறியப்படாதுவிடி

இலவச பேன், மிக்ஸி, கிரைண்டர் வினியோகம் :
ரேஷன் அரிசி வாங்குவோர் விவரம் சேகரிப்பு 

அதிமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ள இலவச பேன், மிக்ஸி, கிரைண்டர் ஆகிய பொருள்கள் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. 

இந்த பொருட்கள் ரேஷனில் இலவச அரிசி மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தில் அரிசி பெறும் கார்டுதாரர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
`இலவச அரிசி பெறும் கார்டுதாரர்கள்’ என்ற அளவீட்டின் அடிப்படையில் இலவச பேன், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருள்கள் வழங்குவதற்காக, மாவட்ட அளவில் கணக்கீடுகளை சேகரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகின்றது.


இதற்காக மாவட்ட அளவில் அரிசி பெறும் கார்டுகள் பற்றிய விவரங்கள் அரசால் கேட்கப்பட்டுள்ளன.

அரசினால் அனுமதிக்கப்பட்டு வழங்கப்படும் பேன், மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருள்கள் அனுப்பப்படும்போது, நுகர்பொருள் வாணிபக்கழக கிட்டங்களில் இருப்பு வைக்கப்பட்டு, வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் வினியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதிசய சம்பவம்:
 தீ விபத்தில் இருந்து 6 பேரை காப்பாற்றியது மாடு


வாயில்லாத ஜீவன் 6 பேர் உயிரை காப்பாற்றியுள்ளது.  இந்த அதிசய சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி-ராயக்கோட்டை சாலையில் சஜ்ஜலப்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் அதே கிராமத்தில் வயலில் வீடு கட்டி வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர் கொப்பக்கரை கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் என்பவரிடம் இருந்து இரண்டு காளை மாடுகளை விலைக்கு வாங்கினார்.

கடந்த வாரம் கிருஷ்ண மூர்த்தி தனது காளை மாடுகளுடன் விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது சஜ்ஜலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரன், சக்திவேல், முனியப்பன், சங்கர், சீமான் என்ற சக்திவேல் ஆகிய 5 பேர் வழி மறித்து இந்த வழியாக செல்ல வேண்டாம் என்று தகராறு செய்தனர்.
 
இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கு இருந்து சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு வயலில் உள்ள வைக்கேல் போருக்கு சிலர் தீவைத்து விட்டனர்.

இதில் வைக்கோல் போர் எரிந்தது. அருகில் உள்ள மாட்டுக் கொட்டகையிலும் தீப்பிடித்தது. இதில் ஒரு மாடு திமிறிக் கொண்டு கயிறை அறுத்துக் கொண்டு பழைய எஜமான் மாதேஷ் என்பவர் வீட்டுக்கு சென்று கத்தியது.

நள்ளிரவு நேரத்தில் மாடு அலறுவதை பார்த்த அவர் எழுந்து வெளியே வந்தார். பின்னர் அந்த மாடு மீண்டும் கிருஷ்ணமூர்த்தியின் வயல் வீட்டுக்கு ஓடியது. அவரும் ஓடினார். அங்கு தீ எரிந்து கொண்டு இருந்தது. வீட்டில் வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் சூழ்ந்து உள்ள புகை மண்டலத்தால் சிலர் கத்துவது தெரிய வந்தது.

மாதேஷ் உடனடியாக தாழ்ப்பாளை திறந்தார். வீட்டுக்குள் படுத்து இருந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி வள்ளி, இரண்டு குழந்தைகள் மற்றும் வள்ளியின் தங்கை நந்தினி, தம்பி ராமமூர்த்தி ஆகியோர் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர்.

பின்னர் நடந்தவற்றை மாதேஷ் கூறவும் 6 பேரும் காளை மாட்டால் உயிர் பிழைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர். வாயில்லாத ஜீவன் 6 பேர் உயிரை காப்பாற்றிய விவரம் அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ள கிராம மக்கள் அந்த காளை மாட்டை அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.

 தீ விபத்தில் அந்த 2 மாடுகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டு உள்ளது. அதற்கு கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்து வருகிறார். 


காவல்நிலையத்தில் இருந்து 7 பேரை மீட்டுச் சென்ற அமைச்சர், எம்எல்ஏ! ஜெயலலிதா கண்டிப்பு! கட்சி நடவடிக்கை இருக்குமா?
செய்தித்துறை அமைச்சர் செந்தமிழன் சென்னையில் உள்ள காவல்நிலையத்திற்கு நேரில் வந்து, அதிமுகவினர் 7 பேரை மீட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுகவினர் சிலர் 12.06.2011 அன்று இரவு கொடி, தோரணம் மற்றும் வரவேற்பு தட்டிகள் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் டெல்லி பயணத்தை முன்னிட்டு அந்த ஏற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவர்கள் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள சிலோன் ஹோட்டலில் அமர்ந்து உணவு அருந்துபோது, விவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அந்த நேரத்தில் தியாகராய நகர் துணை ஆணையர் திருநாவுக்கரசு அப்பகுதியில் சென்றுள்ளார். ஹோட்டலில் இருந்து சத்தம் வருவதை அறிந்த அவர், உள்ளே சென்று விசாரித்துள்ளார். அப்போது நாங்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்று அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.
அந்த சமயத்தில் அதிமுகவினருக்கும், தியாகராய நகர் துணை ஆணையர் திருநாவுக்கரசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதையடுத்து அதிமுகவினரை துணை ஆணையர் தாக்கியதாக கூறப்படுகிறது. நுங்கம்பாக்கம் அதிமுக பகுதி செயலாளர் மாறன், ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட 7 பேரை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்கு துணை ஆணையர் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்கள் காவலில் வைக்கப்பட்டனர்.
அதிமுகவினர் காவல்நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்ட தகவல் அமைச்சர் செந்தமிழன், அதிமுக எம்எல்ஏ வளர்மதி ஆகியோருக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் அதிமுகவினருடன் காவல்நிலையத்திற்கு சென்று எங்கள் கட்சிக்காரர்களை ஏன் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தீர்கள். அவர்களை விடுவிக்க வேண்டும் என்று சொன்னதாக தெரிகிறது.
காவல்நிலையத்திற்கு அதிமுகவினர் அழைத்துவரப்பட்டதற்கான காரணம் தெரிவித்தும், அதனை அமைச்சர் செந்தமிழனும், எம்எல்ஏ வளர்மதியும் கேட்க மறுத்துவிட்டதாகவும், காவல்நிலையத்தில் உள்ள அதிமுகவினரை விடுவிக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். போலீசார் வேறுவழியின்றி அதிமுகவினர் 7 பேரையும் விடுவித்துவிட்டனர்.
இந்தநிலையில் மாறன் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அதில் தங்களை தாக்கிய தியாகராய நகர் துணை ஆணையர் திருநாவுக்கரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறைனர், புகார் பெற்றுக்கொண்டதற்கான ரசீதையும் வழங்கியுள்ளனர். இதனால் துணை ஆணையர் திருநாவுக்கரசு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.


அதிமுகவினர் யாரும் காவல்நிலையத்திற்கு சென்று யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே கூறியுள்ளார். அதையும் மீறி அமைச்சர் செந்தமிழன், எம்எல்ஏ வளர்மதி உள்ளிட்டோர் அதிமுகவினர் 7 பேரை மீட்டுச் சென்றிருப்பதால், அவர்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கை இருக்குமா என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.


முதல் அமைச்சர் ஜெயலலிதா டெல்லி புறப்படும் முன்பு, அமைச்சர் செந்தமிழன் மற்றும் எம்எல்ஏ வளர்மதி ஆகியோரை போயஸ் கார்டனுக்கு அழைத்து கண்டித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக