புதன், 15 ஜூன், 2011சிறீலங்கா அகதிகள் நாடுகடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது

சிறீலங்காவில் போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றுவருதாக சனல் போஃர் நிறுவனம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளபோதும், பிரித்தானியாவில் அகதித்தஞ்சம் கோரியவர்களில் ஒரு தொகுதியினர் நாடுகடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த ரெலிகிராஃப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறீலங்கா பாதுகாப்பானது அல்ல என மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துவரும்போதும், பிரித்தானியாவில் அகதித் தஞ்சம் கோரியவர்களில் 40 பேர் நாடுகடத்தப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிறீலங்காவில் மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சனல் போஃர் தொலைக்காட்சி நிறுவனம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது.
ஆனால் தமிழர்களை நாளை (16) நாடுகடத்துவதற்கு பிரித்தானியா அரசு திட்டமிட்டுள்ளது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.thxx.telegraph

அனுஷ்கா - நாகார்ஜூனா மகன் திருமண நிச்சயதார்த்தம்?நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்தவர் நடிகர் நாகார்ஜூனா. அவரது மகன் நாக சைதன்யாவும் நடிகையை காதலித்து திருமணம் செய்யவுள்ளார்.

நடிகை அனுஷ்காவை நிஜ வாழ்க்கை ஜோடியாக்கப் போகிறார் நாக சைதன்யா. கடந்த வாரத்தில் இவருக்கும் - அனுஷ்காவுக்கும் நிச்சயதார்த்தமே நடந்து முடிந்துவிட்டதாக கிசுகிசுக்கிறார்கள்.


அமலா முன்னணி நடிகையாக இருக்கும் போதுதான் நாகார்ஜுனா அவரை திருமணம் செய்து கொண்டார். அதே மாதிரி அனுஷ்கா முன்னணி நடிகையாக இருக்கும் போதே அவரை நாக சைதன்யா நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 thx-nakkeran


யாழில் இளவயது கருக்கலைப்புகள் அதிகரிப்பு!யாழ். மாவட்டத்தில் சட்டவிரோத இளவயது கருக்கலைப்புகள் அதிகரித்து வருகின்றது என்று யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். இதில் பிரபல பாடசாலை மாணவிகளும் உள்ளடங்குகின்றனர் என்றும் அவர் கூறினார்.
யாழ். மாவட்டத்தின் கலாச்சாரப் பிறழ்வும், சமூகச் சீரழிவுச் செய்பாடுகளும் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொண்டாலும், மனச்சாட்சிக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.
இளம் பெண் பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். அத்துடன், இளவயது பெண் பிள்ளைகள் விடயத்தில் கூடிய அக்கறை எடுத்து அவர்களின் படிப்பு, பாதுகாப்பு இரண்டு விடயங்களில் பெற்றோர் கண்டிப்பாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.saritham


ஜெயலலிதாவுடன் ரஜினி தொலைபேசியில் பேச்சு!
சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர்  ரஜினிகாந்த், டிஸ்சார்ஜ் ஆனார்.
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனாலும், தொடர்ச்சியான பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளுக்காக தொடர்ந்து சிங்கப்பூரிலேயே ஒரு நவீன அபார்ட்மெண்டில் தங்கியுள்ளார். இந்த அபார்ட்மெண்ட் மிகுந்த பாதுகாப்பு மற்றும் சகல வசதிகளும் கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ரஜினிகாந்த் சிங்கப்பூரில் இருந்து முதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் 15.06.2011 அன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது ரஜினிகாந்த், தான் தற்போது சிங்கப்பூரில் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, டிஸ்சார்ஜ் ஆகி வந்தவுடன் முதல் அமைச்சருடன் பேச முடிவு செய்து, தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் இன்னும் ஒன்றரை மாதங்களில் இந்தியா திரும்ப இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ரஜினிகாந்தின் குரலை தொலைபேசியில் கேட்டதும் மகிழ்ச்சியடைந்த ஜெயலலிதா, அவர் குணமடைந்தது குறித்து மகிழ்ச்சியைத் பகிர்ந்து கொள்வதாகவும், விரைவில் இந்தியா திரும்ப வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்தார்.thx-saritham


போர்க்குற்றம் தொடர்பில் அல்சீரா ஊடகவியலாளரிடம் சிக்கி தவித்த அரசின் ஆலோசகர்
[ புதன்கிழமை, 15 யூன் 2011, 06:17.16 PM GMT ]
பிரித்தானியாவின் செனல் 4 ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆவணப் படம் போலியானது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
வேண்டுமென்றே பொதுமக்களை படுகொலை செய்வது போன்ற காட்சிகள் குறித்த ஆவணப்படத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எந்தவிதமான உறுதிப்படுத்தல்களும் இன்றி குறித்த வீடியோ காட்சிகளை செனல்4 ஊடகம் வெளியிட்டுள்ளமை வருத்தமளிப்பதாக லண்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான வீடியோ காட்சிகள் இலங்கை வாழ் பல்லின மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில சர்வதேச ஊடகங்கள் வேண்டுமென்றே ஒரு சிலரைத் திருப்திபடுத்தும் நோக்கில் இவ்வாறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வெளியே வாழும் பிரிவினைவாத சக்திகளின் ஆதரவுடன் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இன்நிலையில் இன்று வெளியான சனல் 4 கணொளி தொடர்பில் ஊடகவியலாளரின் காரசாரமான கேள்விகளுக்கு இலங்கை மனித உரிமைகளின் செயலாளர் ராஐீவ் விஐயசிங்க விழிகள் இரண்டும் பிதுங்க தண்டு தடுமாறி பதிலளித்துள்ளார்.இந்தியாவின் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டாம்: விமல், சம்பிக்க ஜனாதிபதியிடம் வலியுறுத்து
[ புதன்கிழமை, 15 யூன் 2011, 04:45.42 PM GMT ]
இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாட்டினதும் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டாமென அமைச்சர்கள் விமல் வீரவங்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
13வது அரசியல் அமைப்பு திருத்ததில் வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்.
ஆயினும் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் விமல் வீரவங்ச ஆகியோரின் அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதி தனது தீர்மானத்தை மாற்றிக்கொண்டதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்த போது இந்த அமைச்சர்கள் இருவரும் நாடாளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலக்திற்கு சென்று சில மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் போது இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிப்பணிந்து தீர்மானங்களை எடுத்தால் ஜனாதிபதியுடன் கைகோர்த்துள்ள தேசப்பற்றுள்ள சக்திகள் விலகிச் செல்லக் கூடும் எனவும் ஜனாதிபதி தனிமைப்படுத்தப்படலாம் எனவும் கூறியுள்ளனர்.
இந்தியாவும் மேற்குலக நாடுகளும் அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி செய்து வரும் நிலையில் அவர்களின் அழுத்தங்களுக்கு கீழ்ப்படிந்து செயற்படுவதானது தனிப்பட்ட ரீதியில் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பானது என கூறியுள்ள அமைச்சர்கள் எவ்வாறான வெளிநாட்டு அழுத்தங்கள் வந்த போதிலும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுத்தது போன்று இந்த சந்தர்ப்பத்திலும் தீர்க்கமான முடிவுகளை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர். 
இந்தியாவின் அழுத்தங்களுக்கு அடிபணிந்துஇ 13வது அரசியல் அமைப்புத் திருத்;தத்தை அமுல்படுத்தினால், அதனால் ஏற்படப்படப் போகும் சாதக பலன்களை  ஜே.வி.பி பெற்றுக்கொள்ளும் எனவும் அமைச்சர்கள் இருவரும் ஜனாதிபதியிடம் தெளிவுப்படுத்தியுள்ளனர்.thanks-tamilwin


ஐ.நா. அறிக்கையின் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பதிலளிக்க வேண்டும்: பிரித்தானிய தொழிற்கட்சி
[ புதன்கிழமை, 15 யூன் 2011, 04:36.45 PM GMT ]
ஐ.நா அறிக்கையில் இலங்கை அரசு மீது முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் பதிலளிக்கவேண்டும் என பிரித்தானிய தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது. 
இலங்கையின் அண்மைய அபிவிருத்திகள் தொடர்பாகவும், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் நவனீதம்பிள்ளை உரையாற்றியது தொடர்பாகவும் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு பிரித்தானிய தொழிற்கட்சியின் நிழல் வெளிவிவகாரச் செயலாளர் டக்ளஸ் அலென்சாண்டர்  குறிப்பிட்டுள்ளார்.  
இறுதிக்கட்டப் போரில் 2000 ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதத்திற்கு இடையிலான காலப்பகுதியில் அரசாங்க படைகளும், தமிழீழ விடுதலைப் புலிகளும் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர் என நிபுணர்குழு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மனிதஉரிமை மீறலாக அமைந்துள்ளதுடன் போர்க்குற்றத்திற்கு இட்டுச் செல்லக்கூடியது என்று அறிக்கையில் சில விடயங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு அரசாங்கம் பதிலளிக்கவேண்டும். அதேவேளை அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தின் சொந்த விசாரணை குழுவானது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினது நம்பகத்தன்மை குறித்து பல கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இந்த ஆணைக்குழு அனைத்துலகப் பிரதிநிதிகளையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். ஏற்கனவே கால எல்லை நீடிக்கப்பட்டுள்ள இந்த வருடம் நவம்பருக்கு முன்னர் தனது அறிக்கையை வெளியிட வேண்டும்.
இந்த அறிக்கை ஐ.நா நிபுணர்குழு பரிந்துரைத்துள்ள விடயங்களை உள்ளடக்கியதாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும். உண்மையான இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு நீதி கிடைக்க வழி செய்து, போர்க்குற்றம் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டால் மாத்திரமே இலங்கையில் அமைதியைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் டக்ளஸ் அலென்சாண்டர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.


பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்ட கூட்டம் !


பிரித்தானியாவின் நாடாளுமன்ற வளாகத்தில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்ட கூட்டம் ஒன்று நாளை வியாழக்கிழமை (யூன் 16) இடம்பெற இருப்பதாக நா.த.அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம், பிரித்தானியா அரசியல் மட்டத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நா.த.அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கெடுக்கின்றனர்.
தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர்குற்றங்கள், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் - பிரித்தானியாவில் இருந்து தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படுதல் தொடர்பிலான விவகாரம் மற்றும் ஈழவிடுதலைப் போராட்டத்தில் நா.த.அரங்சாங்கத்தின் வகிபாகம் ஆகிய விடயங்களை முன்னிறுத்தியதாக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐநா நிபுணர் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டவாறு, அனைத்துல நீதிவிசாரணை மற்றும் அனைத்துலக பொறிமுறை ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஆதரவினையும், இதற்கான அழுத்தம் அரச மட்டத்தில் மேற்கொள்வதற்கு வேண்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது


இலக்கு வைக்கப்படும் றெஜி! சிறிலங்கா புலனாய்வுத்துறை தீவீரம்!
[ புதன்கிழமை, 15 யூன் 2011, 02:34.11 PM GMT ]
போர்குற்றங்கள் குறித்தான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் சிறிலங்கா அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் மீது சில போர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஐநா நிபுணர் குழுவின் குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா அரசு தொடர்சியாக மறுத்து வரும் நிலையில் விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறவும் விசாரணைகளுக்கு தயாரெனவும் தமிழர் புனர்வாழ்வுக்கழக பணிப்பாளர் றெஜி அவர்கள் அனைத்துலக சமூகத்துக்கு வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
விடுதலைப்புலிகளின் பல மூத்த உறுப்பினர்கள் இறுதிகட்ட யுத்தத்தில் சாவடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் எஞ்சியுள்ள மூத்த உறுப்பினர்களில் ஒருவராக றெஜி இருக்கின்றார்.
விடுதலைப்புலிகளின் நிலைப்பாடாக றெஜி மூலம் அனைத்துலக சமூகத்துக்கு தெரிவிக்கப்பட்ட இக்கூற்று சிறிலங்கா அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.
ஐ.நாவின் நிபுணர் குழுவின் குற்றச்சாட்டுக்களை தொடர்சியாக நிராகரித்து வரும் சிறிலங்கா அரசுக்கு - விடுதலைப் புலிகளின் இந்த இராஜதந்திர நகர்வு பெரும் நெருக்கடியை சர்வதேச மட்டத்தில் தோற்றுவித்துள்ளதான இராதந்திர அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
குற்றம்சாட்டப்பட்டுள்ள இருதரப்பில் ஓரு தரப்பு விசாரணைகளை சந்திக்க தயார் எனும் நிலைப்பாடு - மறுதரப்புக்கு சங்கடத்தை ஏற்படுத்தை ஏற்படுத்துவது முக்கியமானதொரு சர்வதேச இராதந்திர பொறிமுறை.
இந்நிலையிலயே றெஜியின் இந்த நிலைப்பாட்டை நோக்கி சர்வதேச சமுகம் நகர்வதற்கு முன்னர் - றெஜியை பலவீனப்படுத்துவன் ஊடாக விடுதலைப்புலிகளின் சர்வதேச நிலைப்பாட்டடை பலவீனப்படுத்தலாம் என சிறிலங்கா அரசு செயற்படத் தொடங்கியுள்ளதாக கொழும்பில் இருந்து இயங்கி வரும் ஆங்கில இணைய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை கொழுப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துரைத்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல ' விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை முடக்குவதற்கு சிறிலங்கா தயாராகி வருவதாக தெரவித்துள்ளார்.
றெஜியை பணிப்பாளராக கொண்டு வெளிநாடுகளில் இயங்கி வருகின்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை சிதைப்பதை முதற்பொறிமுறையாக சிறிலங்கா அரசு வகுத்துள்ளது.
ஏற்கனவே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் இயங்கி வருகின்ற புனர்வாழ்வுக் கழகத்தை முடக்க வேண்டிய நிலையை சிறிலங்கா எடுத்துள்ளது.
குறிப்பாக வெளிநாடுகளில் தமிழர்கள் பரந்தளவில் பெருவாரியாக ஒன்றுகூடுகின்ற நிகழ்வுகளில் ஒன்றாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தமிழர் விளையாட்டு விழாவும் ஒன்றாகவுள்ளது.
இந்நிலையிலேயே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் பிரான்சில் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழர் விளையாட்டு விழாவை முடக்குவதற்கு சிறிலங்கா முனைந்து வருகின்றது.
கடந்த இருவாரங்களுக்கு முன்னர் கொழும்புக்கு அவசர அவசரமாக அழைக்கப்பட்ட பிரான்சுக்கான சிறிலங்கா தூதுவரிடம் இதற்கான வேலைத்திட்டத்தை கையளித்துள்ள சிறிலங்காவின் சா்வதேச புலனாய்வுத்துறை - இதற்கு பக்கத்துணையாக சிறிலங்கா கைக்கூலிகளாக இருக்கின்ற சில தமிழர்களையும் இணைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் சேட்டைகள் மற்றும் நிதிமோசடி காரணமாக விடுதலைப் புலிகளினால் தண்டிக்கபட்டு வெளியேற்றபட்ட இரும்பொறை எனும் அரவிந்தன் எனும் நபரே தமிழர்களுக்கான சர்வதேச இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இரும்பொறையின் செயற்பாடுகள் குறித்து விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை உள்ளக அறிக்கையில் எச்சரிக்கை செயற்பாட்டாளர்களுக்கு விடுத்திருந்தது.
பிரான்சில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழர் விளையாட்டு விழாவை முடக்கும் சதி நடவடிக்கைகளின் தொடக்கமாகமாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கே.பியின் வசமாகியிருந்தது எனும் செய்தி சமீபத்தில் திட்டமிட்டு பரப்பப்பட்டிருந்தது.
சிறிலங்கா சர்வதேச புலனாய்வுத் துறையின் திட்டமிட்ட சதிவலைச் செய்தியை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உடனடியாக மறுத்ததுடன் தெளிவான அறிக்கையூடாக மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
சிறிலங்கா அரசின் சதிநடவடிக்கைகளின் தொடர்சியாக விளையாட்டு விழா ஆண்டு தோறும் இடம்பெற்று வருகின்ற மைதான முன்றலை முடக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.
குறித்த மைதானத்தை உள்ளடக்கியதான நகரசபையினைத் தொடர்பு கொண்டு கைக்கூலிகள் 'பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பணம் சேர்க்கவே விளையாட்டு விழா இடம்பெறுவதாக' கதைஅகூறியுள்ளனர்.
யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலங்களில் இத்தகைய செய்பாடுகளை சிறிலங்காத் தூதரகம் முன்னெடுத்துள்ள நிலையில் தற்போது சிறிலங்காவின் கைக்கூலிகளாக தமிழர்கள் ஈடுபவது குறித்து நகரசபை ஆச்சரியம் கொண்டுள்ளது.
இந்தச் சதிவலை வேலைத்திட்டங்களை முடியடிக்கும் நோக்கில் நீண்டகாலமாக விடுதலைக்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றவர்கள் தமிழர் விளையாட்டு விழாவை திறம்பட நடாத்துவதற்கு தயாராகி வருவதாக பாரிஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரான்சுக்கான சிறிலங்காத் தூதுவர் தயான் ஜெயதிலக மற்றும் இரும்பொறை ஆகியோரின் கூட்டுச் சதி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு உள்ளக அறிக்கை மூலம் செயற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவருதாக தமிழர் அமைப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐ.நாவின் நிபுணர் குழுவின் குற்றச்சாட்டுக்களை தொடர்சியாக நிராகரித்து வரும் சிறிலங்கா அரசு - விசாரணைகளுக்கு ஒத்துழைக்க தயார் என அறிவித்துள்ள விடுதலைப் புலிகளின் இராஜதந்திர நிலைப்பாட்டை - அனைத்துல சமூகத்தின் சாதகமாக நோக்குவதற்கு முன்னர் - தமிழர்களை பலவீனப்படுத்த சிறிலங்காவின் செய்திட்டத்துடன் கைக்கூலிகளாக தமிழர்கள் சிலர் மாறியுள்ளமை இன்றைய அவசரமானதும் அபாயகரமானதுமான எச்சரிக்கை எனலாம்.thanks-tamilwin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக