சனல் 4 ஒளிபரப்பிய இலங்கையின் படுகொலைக்களம் காணொளி குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் அவதானத்துடன் இருப்பதாகவும், ஆனால் அவர் அந்த காணொளியை பார்க்கவில்லை என்றும் ஐ.நா பேச்சாளர் மார்டீன் நெசர்க்கி தெரிவித்துள்ளார்.
ஆனால் இறுதிக்கட்டப் போரின் போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பக்கூற வேண்டும் என்பதில் பான் கீ மூன் தெளிவாக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
போர்க் குற்றம் தொடர்பாக அனைத்துலக விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கையின் இணக்கம் அல்லது பாதுகாப்புச்சபை, பொதுச்சபை மற்றும் மனிதஉரிமை அமைப்புக்களின் ஒப்புதல் கிடைக்கப்பெற வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக