வியாழன், 16 ஜூன், 2011பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் நேற்று முன்தினம் ஒளிபரப்பிய இலங்கையின் படுகொலைக்களம் என்ற ஆவணப்படத்தை உலகெங்கிலும் இருந்து 7 இலட்சம் மக்கள் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சனல் 4 ஒளிபரப்பிய, இலங்கைப் படையினரால் நிர்வாணமாக இழுத்து வரப்பட்ட தமிழ் கைதிகள் கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகள், பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சடலங்களாக காணப்படும் காட்சிகள், வாகனங்களில் இழுத்து வரப்படும் சடலங்கள், வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்கள் என்பன மிகவும் கொடுமையாக அமைந்திருந்தன.

இந்த ஆவணப்படத்தை 7 இலட்சம் பேர் நேரிடையாகவும், ஒரு இலட்சம் பேர் சனல் 4 பிளஸ் வன் அலைவரிசை மூலமும் பார்வையிட்டுள்ளர். பிரித்தானியிவின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக மக்கள் பார்வையிட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக “இலங்கையின் கொலைக்களம்” ஆவணப்படம் நிகழ்ச்சி அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.thx-tamilenn

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக