செவ்வாய், 14 ஜூன், 2011


இலங்கைத் தமிழர் குறித்து மன்மோகன் சிங் - ஜெயலலிதா பேச்சு
[ செவ்வாய்க்கிழமை, 14 யூன் 2011, 08:57.29 AM GMT ]
தமிழக முதலமைச்சரும் அதிமுக தலைவியுமான ஜெயலலிதா ஜெயராம் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை புதுடில்லியில் இன்று செவ்வாய்க்கிழமை பகல் சந்தித்துப்பேசினார்.
புதுடில்லியிலுள்ள  இந்திய பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ் தலத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. சுமார் 20 நிமிடங்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடந்த மாதம் தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர் அவர் இந்திய பிரதமரை சந்தித்தமை இதுவே முதல் தடவையாகும்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, தமிழக மீனவர்கள் விவகாரம் மற்றும் இலங்கைத் தமிழர் பிரச்சினை ஆகிய இப்பேச்சுவார்த்தையில் முக்கிய இடம்பெற்றதாக தெரிவித்தார்.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனும் இச்சந்திப்பில் கலந்துகொண்டதாகவும் ஜெயலலிதா கூறினார். இது குறித்த மேலதிக விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
கடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணியை தோற்கடித்து அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அதிமுக சேருமா எனக் கேட்கப்பட்டபோது, ஐ.மு.கூட்டணியிலிருந்து இதுவரை யாரும் அது தொடர்பாக தம்மை அணுகவில்லை எனவும் அதனால் அதில் இணைவது குறித்த கேள்வி எழவில்லை எனவும் ஜெயலலிதா பதிலளித்தார்.
அதேவேளை, தமிழ்நாடு மாநிலத்தின் நலன்கருதி மத்திய அரசுடன் எந்த மோதலிலும் ஈடுபடுவதற்கு தான் விரும்பவிலிலை என ஜெயலலிதா செ;யதியாளர்களிடம் தெரிவித்தார்.
புதுடில்லி தமிழ்நாடு பவனில்  இருந்த ஜெயலலிதா, பிரதமர் அலுவலகம் அனுப்பிய விசேட வாகனமொன்றின் மூலம் ரேஸ் கோர்ஸ் சாலையிலுள்ள பிரதமர் அலுவலகத்தை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக